இந்திய உணவு வகைகளில் சின்ன வெங்காயம் இல்லாத உணவையே பார்க்க முடியாது. எந்த புலம்பாக இருந்தாலும் சரி சின்ன வெங்காயம் பயன்படுத்தி சமைப்பதினால் அதன் சுவை நாக்கில் நிற்கும்.அதிக கார் தன்மையை கொண்ட சின்ன வெங்காயத்தை சமைத்து சாப்பிடுவதில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது அதைவிட அதிகமாக பச்சையாக சாப்பிடுவதினாலும் நன்மைகள் அதிகமாக இருக்கிறது.
அந்தக் காலத்தில் பழைய சோற்றில் பச்சை மிளகாய் உடன் பச்சை சின்ன வெங்காயத்தை உரித்து போட்டு சாப்பிடுவார்கள். காலையில் இந்த சின்ன வெங்காய பழைய சோற்றை சாப்பிட்டு விட்டு வயல் வேலைக்கு செல்பவர்களுக்கு மதியம் வரை பசி எடுக்காது. அவ்வளவு வலிமையாக அவர்கள் வேலை பார்க்க உதவுவது அந்த பழைய சோறு மட்டுமல்ல, உடன் சாப்பிடும் சின்ன வெங்காயமும் தான். உடலுக்கு அவ்வளவு வலிமையை கொடுக்கும் சின்ன வெங்காயம் அதிக காரத்தை கொண்டது. இதன் நன்மையை தெரிந்துதான் நமது முன்னோர்கள் சின்ன வெங்காயத்தை பழைய சோறு,கூழ் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டு உள்ளார்கள்.சின்ன வெங்காயத்தின் அதிக காரத்தன்மை இருக்க காரணம் “அலைல் புரோப்பைல் டை சல்பைடு” என்னும் ஒரு வகை எண்ணெய் தான்.வெங்காயத்தை வெட்டும் பொழுது நம் கண்களில் கண்ணீர் வருவதற்கும், நெடி ஏறுவதற்கும் காரணமாக அமைவது இந்த திரவம் தான்.
100 கிராம் சின்ன வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் எவ்வளவு?
கலோரிகள் | 57 |
நீர்சத்து | 84.67 கிராம் |
புரதம் | 1.82 கிராம் |
நார்சத்து | 1.16 கிராம் |
கொழுப்பு | 0.16 கிராம் |
கால்சியம் | 19.93 மில்லிகிராம் |
மாவுசத்து | 11.58 கிராம் |
இரும்புசத்து | 0.53 மில்லிகிராம் |
பாஸ்பரஸ் | 39.65 மில்லிகிராம் |
மொத்த கரோட்டின் | 31 மைக்ரோகிராம் |
நியாசின் | 0.21 மில்லிகிராம் |
பயோட்டின் | 2.69 மைக்ரோகிராம் |
போலேட் | 29.68 மைக்ரோகிராம் |
தயாமின் மில்லி | 0.07 கிராம் |
ரிபோஃபுளேவின் | 0.02 மில்லிகிராம் |
சின்னவெங்காயம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மையை கொண்டது. சின்ன வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மற்றும் கண் வலி குணமாகும். ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி அதிகம் உள்ள காரணத்தினால் வாய்ப்புண் மற்றும் கண் வலிக்கு சிறந்த நிவாரணியாக சின்ன வெங்காயம் உள்ளது.சின்ன வெங்காயம் பெரும்பாலும் வேகவைத்து சாப்பிடுவார்கள். வேக வைக்காமல் பச்சையாக கூட சாப்பிடலாம். பச்சையாக சாப்பிடுவதால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உடலுக்குள் போய் சேரும். பச்சையாக சாப்பிடுவதால் நிறை நன்மைகள் உண்டு என்று தெரிந்தும் இதை அனைவரும் சாப்பிட மறுப்பதற்கு காரணம், இந்த பச்சை வாடை ஆனது வாயில் துர்நாற்றம் வீசக்கூடும். ஆனால் இதைப் பற்றி யோசித்தால் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் எப்படி கிடைக்கும். ஆனால் இந்த துர்நாற்றம் நீங்கவும் ஒரு வழி இருக்கிறது. சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டபின் இரண்டு அல்லது மூன்று புதினா இலைகளை வாயில் போட்டு நன்றாக மெல்லுங்கள். புதினா இலையின் நறுமணம் சின்ன வெங்காயத்தின் பச்சை வாடை நீக்கும்.சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை எடுத்துக் கொள்வது நல்ல தேர்வாக அமையும்.உடல் எடை குறைக்க விரும்புவோர் சின்ன வெங்காயத்தை எடுத்துக் கொள்ளலாம். மற்றும் கொழுப்பை குறைப்பது போன்ற பல பிரச்சனைகளுக்கு சின்ன வெங்காயம் ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.
சின்ன வெங்காயம் சாப்பிடுவதனால் வரும் மருத்துவ நன்மைகள் :
- நரம்பு தளர்ச்சி குணமாகும்
- ஆசன கடுப்பு நீங்கும்
- வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்
- உடல் நல்ல வலுவாக இயங்கும்
- சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்
- பல் மற்றும் ஈறு வலி சரியாகும்
- வாய்ப்புண் சரியாகும்
- செரிமான பிரச்சனை குணமாகும்
- மூளையில் உள்ள கோளாறுகள் நீங்கும்
- காது இரைச்சல் குணமாகும்
- நெஞ்சு வலி உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக சின்ன வெங்காயம் திகழ்கிறது
- சின்ன வெங்காயம் சாப்பிடுவது சிறந்த எலும்பு ஆரோக்கியத்தை உருவாக்க உதவும்.
- புற்று நோயை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது சின்ன வெங்காயம்.
- சொத்தைப்பல் உள்ள இடத்தில் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து வைத்து வந்தால் அதில் உள்ள புழுக்கள் கூட இறந்துவிடும்.
- சின்ன வெங்காயத்தின் சாறை ஃபேஸ் பேக் ஆக சேர்த்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கீறல் தழும்புகள் போன்றவை நீங்கும்
- சின்ன வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி, பார்வை மங்குதல், முழங்கால் வலி, தலைவலி போன்றவை குணமாகும்.
- பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகள் சின்ன வெங்காயத்தில் நிறைய உள்ளது. அதனால் சின்ன வெங்காய சாரை தலையில் தேய்த்து குளிப்பதனால் பொடுகு மற்றும் பேன்கள் நீங்க நீங்க உதவுகிறது.