கீரைகள் என்றாலே சத்துக்கள் கொட்டிக் கிடக்கும் ஓர் உணவுப்பொருள் தினமும் ஒரு கீரையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவது.அப்படியே சாப்பிட்டாலும் சிறுகீரை, பாலக் கீரை, பசலை கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை போன்ற சில கீரைகளை மட்டுமே சாப்பிடுகிறோம்.
ஆனால் தமிழில் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிற 100 கணக்கான கீரை வகைகள் இருக்கின்றன.ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு தனித்தன்மையும் மருத்துவ குணங்களும் இருக்கிறது. ஏதாவது ஒரு கீரையை உங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கீழ்வரும் நன்மைகளைப் பெறலாம்.
கீரைகளில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துகக்ள் ஜீரண ஆற்றலை அதிகரிக்கும் . அதோடு மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளையும் தீர்க்கும்.
கீரைகள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதோடு எலும்புகளையும் வலிமைப்படுத்தும்.
தினமும் கீரையை உணவில் சேர்ப்பதால் ரத்தசோகை என்னும் அனீமியாவைத் தடுப்பதோடு ரத்தத்தில் ‘ஹீமோகுளோபின்ள அவை அதிகரிக்கச் செய்யும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, டீடாக்ஸ் செய்வதோடு கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அதோடு ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய இரண்டுமே கட்டுக்குள் இருக்கும்.
முருங்கை கீரை
முருங்கை கீரையை கீரைகளின் ராணி என்றே சொல்லலாம். அவ்வளவு மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கும் கீரை இது. எளிமையாக சொல்லப்போனால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அத்தனை பிரச்சினைகளையும் தீர்க்கும் அற்புத கீரை தான் இந்த முருங்கை கீரை என்று சொல்லலாம்.

முடக்கத்தான் கீரை
முடக்கத்தான் கீரை எலும்புகள் வலிமையாகவும் அதில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களை குறைக்கும் அற்புதங்களைச் செய்யும். இதன் பெயரே முடக்கு அறுத்தான் கீரை. முடக்குவாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்க உதவி செய்யும்.
வெந்தயக் கீரை
வெந்தய விதைகள் எடுக்கும்போது நம்முடைய உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறதோ அவையெல்லாம் இந்த வெந்தயக்கீரை சாப்பிட்டாலும் நடக்கும்.வெந்தயக் கீரை ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.அதோடு உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலையும் குறைக்கும். இன்சுலின் சென்சிடிவிட்டியைத் தூண்டும்.கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கும்.
சிறுகீரை
சிறுகீரை அற்புதங்கள் கொட்டிக்கிடக்கும் ஒரு கீரை என்று சொல்லலாம். சிறுகீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகிய வைட்டமின்களும் இரும்புச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ் உள்ளிட்ட கனிமச் சத்துக்களும் அதிகமாக இருக்கின்றன.
கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும். தொடர்ந்து சிறுகீரையை உணவில் சேர்ப்பதன் மூலம் கண்புரை உள்ளிட்ட கண் சார்ந்த நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். எலும்பு மற்றும் நரம்புகளை வலிமையாக்குவதோடு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கீரை வகைகள்
வல்லாரைக்கீரை | சக்கிரவர்த்தி கீரை | மூக்கிரட்டை கீரை | புளிச்சக்கீரை | கோவைக்கீரை |
பரட்டை கீரை | .ஆடாதொடை | குப்பைகீரை | தும்பை கீரை | கற்பூரவல்லி |
அவுரி இலை | தாளிக்கீரை | -பூவரசு இலை | அதொண்டை கீரை | மாதுளை இலை |
வில்வ இலை | பால்பெருக்கிகீரை | ஆல இலை | தாளிக்கீரை | வாழை இலை |
தொட்டால்சிணுங்கி கீரை | செம்பருத்தி (செம்பரத்தை) | சத குப்பைகீரை | சீமைஅகத்தி இலை | காசினிக்கீரை |
கொத்தமல்லிகீரை | தவசிகீரை | சிகப்பு பொன்னாங்கண்ணி | சாரனைக்கீரை | இரணகள்ளி |
தாளிக்கீரை | புளியங்கீரை | மணலிக்கீரை | துயிலிக்கீரை/தொய்யல்கீரை/ | கீழாநெல்லி |
சொடக்கு தக்காளி கீரை | குப்பைமேனி கீரை | கருவேப்பிலை | கல்யாண முருங்கை | துளசி |
கண்டங்கத்திரி இலை. | கொய்யா இலை | இலந்தை இலை | கற்றாழை | சுக்காங்கீரை |
பருப்புகீரை | அம்மான் பச்சரிசி | பாலக்கீரை | முடக்கத்தான் | முசுமுசுக்கை கீரை |
பேய்மிரட்டி | நிலவேம்பு | மந்தாரை இலை | அருகம்புல்இலை | பாகல் இலை |
அரச இலை | .பீர்க்கன் இலை | நார்த்தை இலை | பூசனி இலை | மா இலை |
சிகப்புதண்டு கொடிபசலை | பசலைகீரை | தூதுவளை | மணத்தக்காளி கீரை | கானாவாழை |
கரிசலாக்கண்ணி | எலுமிச்சை புல் | முள்ளங்கி கீரை | பிரண்டை | புதினா |
அகத்திகீரை | நாட்டுபொண்ணாங்கன்னி | நொச்சி இலை | லச்லக்கெட்டை கீரை | நாயுருவிக்கீரை |