தூதுவளை அனைத்து இடங்களிலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு மூலிகை செடி ஆகும். காய கற்பூர மூலிகைகளில் ஒன்றாகும் இந்தத் தூதுவளை. சித்த மருத்துவத்தில் காயகற்பூரம் மருந்துகள் மிகவும் பிரசித்தி பெற்றவை அதில் தூதுவளை மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
காயகற்பம் என்றால் என்ன?
காயம் என்றால் “உடல்” . கற்பம் என்றால் “உடலை நோய் அணுகாதபடி பாதுகாப்பது”. இந்தப் பெயர் காரணத்திலிருந்து நமக்கு ஒன்று தெரிய வருகிறது தூதுவளை நம் உடலை நோய்கள் அணுகாத வண்ணம் காக்க கூடிய சக்தி பெற்றது. சிங்கவல்லி, அளர்க்கம் என்று வேறு பெயர்களாலும் தூதுவளை அழைக்கப்படும்.
இந்தத் தூதுவளைக் கீரை அனைத்து தோட்ட வேலிகளிலும் வளரும் ஒருவகையான கொடி இனம்.தூதுவளை கொடிகள் முழுவதும் முற்கல் நிறைந்து காணப்படும். இதில் உள்ள இலை தழை பூக்காய் ,கனி என அனைத்துமே மருத்துவ குணங்களால் நிரம்பியுள்ளது. தூதுவளையை துவையல்,ரசம், சூப், கீரை பொரியல், ஊறுகாய் எனப் பல்வேறு விதமாகச் சாப்பிடலாம்.
தூதுவளையின் பயன்கள்
சளி இரும்பல்
” தூதுவளை இலை அரைச்சு தொண்டையில தான் நெனச்சு மாமன் கிட்ட பேசப் போறேன் மணிக்கணக்கா……“
என்ற பாடல் வரிகள் குறிப்பிடுவது போல இது தொண்டை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வாகப் பயன்படுகிறது குரல் வளத்தை மேம்படுத்தவும் தொண்டையில் உள்ள நோய் தொற்றுகளை அகற்ற ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது இந்தத் தூதுவளை.
தூதுவளை இலையைப் பறித்து நன்றாகச் சுத்தம் செய்து அதனுடன் பூண்டு மிளகு வெங்காயம், சீரகம் காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு உப்பு சேர்த்து வதக்கித் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் சளி இரும்பல் பிரச்சனை நீங்கும்.
தூதுவளை இலையைச் சுத்தம் செய்து மிளகு சீரகம், சோம்பு இஞ்சி பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்து ரசம் போல் தாளித்து சாப்பிட்டு வந்தால் சளி இரும்பல் இரைப்பு போன்றவை நீங்கும்.
புற்று நோயைத் தடுக்க பயன்படுகிறது:
தூதுவளையை நம் உணவில் உட்கொள்ளும்பொழுது நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகி புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். மருத்துவ ஆராய்ச்சிகள் தூதுவளையில் அதிகப்படியான நோய்ப்பு சக்தி இருப்பதன் காரணமாக இது தொண்டை புற்று வாய் புற்று கருப்பை புற்று ஆகியவற்றிற்கு ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது என மருத்துவ ஆய்வில்கண்டறியப்பட்டுள்ளது. தூதுவளையை நாம் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நம் உடலில் அதிகப்படியான ரத்த அணுக்கள் உருவாகி நோய் தொற்று வராமல் நம்மைப் பாதுகாக்க உதவுகிறது.
நரம்பு தளர்ச்சி
இன்றைய காலங்களில் அனைவருக்கும் நரம்பு தளர்ச்சி பிரச்சினை ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அதிகப்படியான தொலைபேசியை உபயோகப்படுத்துவதும் அதில் விளையாட்டுகள் விளையாடுவதும் ஒரு காரணம். நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் அனைவரும் தூதுவளைக் கீரையை வாரத்திற்கு மூன்று முறை சமையலில் ரசமாகவோ துவையல் ஆகவோ கூட்டாகவோ பொரியல் ஆகவோ சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெற்று நரம்பு தளர்ச்சி நீங்கும்.
ஆண்மையை அதிகரிக்கும்
ஆண்களுக்கு ஏற்படக்கூடிய ஆண்மை குறைபாடை நீக்குவதில் தூதுவளை ஒரு சிறந்த மருந்தாகும் தூதுவளையை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மூன்று மாதங்கள் சாப்பிட்டு வர ஆண்மை குறைபாடு நீங்கி ஆண்கள் பலன் பெற்று வருவர். எலும்புகள் மற்றும் பற்களை வலுவப்படுத்த உதவுகிறது தூதுவளை. தூதுவளையில் அதிகப்படியாகக் கால்சியம் சத்து உள்ளபடியினால் இது எலும்புகள் மற்றும் பற்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. பற்கள் தொடர்பான நோய் உள்ளவர்கள் தூதுவளையே கீரையை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். இதில் உள்ள கால்சியம் நம் உடலில் உள்ள எலும்பில் உள்ள குறைபாடுகளை நீக்கி எலும்பு வளம் பெற உதவுகிறது.
விஷக்கடி
விஷக்கடிகளுக்கு சிறந்த மருந்தாக இந்தத் தூதுவளைக் கீரை பயன்படுகிறது. தேள்,பூரான், விஷ வண்டுகள் என எல்லா வகையான விஷ கடிகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது இந்தத் தூதுவளை. தூதுவளை பொடியைத் தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் விஷமுறிவு ஏற்படும். உடல் பித்தம் அதிகரிக்க சிலருக்கு தலைவலி மயக்கம் போன்றவை ஏற்படும் அதனைச் சரி செய்யவும் இந்தத் தூதுவளை பொடியைப் பயன்படுத்தலாம்.
ஆஸ்துமா
ஆஸ்துமா சிகிச்சையில் தூதுவளை நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய நடைமுறைகள் பெரும்பாலும் ஆஸ்துமா அறிகுறிகளைப் போக்க தூதுவளை இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட சூப்பை உட்கொள்வதன் மூலம் ஆஸ்துமா கட்டுப்படுத்தும், மேலும் இந்த நடைமுறை இப்போது ஆராய்ச்சியால் ஆதரிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆய்வில், தூதுவளையின் பயன்பாடு ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல், இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளைக் கணிசமாகக் குறைத்தது.

அனிட்-ஆக்ஸிஜனேற்ற பண்புகள்
தூதுவளை என்பது நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க அவசியமான ஆக்ஸிஜனேற்றிகளின் சக்திவாய்ந்த மூலமாகும். ஆக்ஸிஜனேற்றிகள் தோல் மற்றும் முடிகளை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. எந்த வடிவத்திலும் தூதுவளை உட்கொள்வதன் மூலம், ஃப்ரீ ரேடிக்கல்களின் எதிர்மறை விளைவுகளைக் குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவலாம்.
வலிமை மற்றும் ஆற்றல்:
இந்த மூலிகை உடலில் வலிமை மற்றும் ஆற்றலைப் பெறுவதற்கு மிகச் சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இந்த மூலிகையில் உள்ள இயற்கை ஸ்டீராய்டுகள் மனிதனுக்கு வலிமை மற்றும் சகிப்புத்தன்மையைத் தருகின்றன. இந்த மூலிகையின் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் டானிக் மிகவும் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
சைனஸுக்கு துதுவளை:
ஆயுர்வேதத்தில் இந்த மூலிகை சைனஸ், நுரையீரல் நோய்களுக்குச் சிகிச்சையளிக்கவும், காசநோய் சிகிச்சைக்குக் கூட பிரபலமாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தூதுவளை வற்றல் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதனை உணவில் அடிக்கடி உட்கொண்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் தீர்வாகப் பயன்படும். மற்ற பருப்பு சேர்த்து கடை 4 சாப்பிட்டு எலு பற மூட நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைகளில் ஏற்படக்கூடிய புண்கள் மற்றும் மூக்கில் நீர் வடிவது அதிக அளவில் நீர் சுரப்பது ஈறுகளில் நீர் சுரப்பது போன்ற பிரச்சனைகளைச் சரிச் செய்ய தூதுவளைக் கீரை ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
விலங்குகளுக்குத் தூதுவளையின் பயன்பாடுகள்:
தூதுவளை இலைச் சாறு ஓரியோக்ரோமிஸ் மோசாம்பிகஸின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தாவரத்தின் நீர் மற்றும் ஹெக்ஸேன் பின்னங்கள் லைசோசோம் செயல்பாட்டை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஏரோமோனாஸ் ஹைட்ரோபிலியாவிற்கு எதிராக மீன் இனங்கள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. தூதுவளை தாவரத்தில் உள்ள சோபாட்டம், மீன் உயிரைப் பாதுகாக்கும் எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களையும் மேம்படுத்துகிறது.
சில தூதுவளை உணவுகள்

தோசை
ஒரு கைப்பிடி தூதுவளை இலைகள் மற்றும் ஊறவைத்த அரிசியை மற்ற மசாலாப் பொருட்களுடன் சேர்த்து தூத்துவாலை தோசை செய்யலாம். இந்தத் தோசை தனித்துவமான சுவையுடையது மற்றும் மிகவும் ஆரோக்கியமானது.
ரசம்
இந்த இலைகளை நிலையான ரசம் பொருட்களுடன் சேர்ப்பதன் மூலம், நீங்கள் அஜீரணத்தைத் தவிர்க்கலாம் மற்றும் மீண்டும் மீண்டும் வரும் ரசம் உணவுகளிலிருந்து தப்பிக்கலாம்.
துவையல்
இது வறுத்த தூதுவளை இலைகள், தேங்காய், புளி மற்றும் மிளகு ஆகியவற்றைக் கொண்ட ஒரு வகையான கெட்டியான பேஸ்ட் ஆகும். இதை சாதத்துடன் பரிமாறலாம்.