பல் வலி வந்தால் அதை சொல்லவும் முடியாது சொல்லாமல் இருக்கவும் முடியாது. நம் உயிரையே எடுத்து விடும். நம் அன்றாட வேலைகளை செய்ய பெரிய தடையாக இருந்து விடும். சாப்பிடவும் முடியாது ஆனால் பசிக்கும். சாப்பிடாமல் இருப்பதனால் அடுத்து தலைவலி வயிற்று வலி என அடுத்தடுத்த வழிகளை உண்டாக்கி கொண்டே போய்க்கொண்டிருக்கும். அதற்கான வலி நிவாரணி மாத்திரைகளை போட்டுக் கொள்வதனால் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அந்த வலி இல்லாமல் இருக்கும். ஆனால் மீண்டும் அந்த வலி வந்து தொல்லை கொடுக்கும். அதற்காக வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி போட்டுக் கொள்ளவும் முடியாது போட்டுக் கொள்ளவும் கூடாது. அது பல பிரச்சனைகளையும், பின் விளைவுகளை உண்டாக்கும்.
அதனால் இதுபோன்ற ஆபத்தான வழி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளாமல் எளிய முறையில் நம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் சில பொருட்களைக் கொண்டு பாட்டி வைத்திய முறையில் செய்து பார்க்கலாம். இந்த வைத்தியம் மூலம் இதன் பிறகு பல்வளியே வராது என்று உத்தரவாதமும் கொடுக்க முடியாது. ஆனால் ஒரு வேலை ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் கழித்து மீண்டும் பல்வழி வந்தால், மீண்டும் இது போன்ற பாட்டி வைத்தியத்தை நாம் செய்து கொள்ளலாம். இந்த வைத்தியம் மூலம் எந்த ஒரு பக்க விளைவும் பிரச்சனையும் இருக்காது.
பல் வலி போக்க பாட்டி வைத்தியம்:
வைத்தியம் 1 : உப்பு நீர் கொண்டு வாயை கழுவுவது தான் இதற்கு ஒரு சிறந்த வைத்தியம். ஏனென்றால் உப்பு ஒரு சிறந்த கிருமி நாசினி ஆகும். சிலருக்கு பற்களில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆனால், பற்களுக்கு இடையில் நாம் உண்ணும் உணவானது சிக்கிக் கொண்டால் அதுவும் பல் வலியை உண்டாக்கும். ஆனால் உணவு சிக்கிக் கொண்டது நமக்குத் தெரியாமல், நம் பல் வலிக்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்போம். அதற்கும் ஒரு சிறந்த முறையாக இந்த வைத்தியம் கருதப்படுகிறது.
½ டீஸ்பூன் உப்பு எடுத்துக்கொண்டு, இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில், அந்த உப்பை நன்றாக கரைத்துக் கொள்ளவும். தூள் உப்பை எடுத்து கரைப்பதை விட, கல் உப்பை எடுத்து கரைத்துக் கொண்டால் இன்னும் நல்லது. இந்த உப்பு நீர் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி நன்றாக வாயின் அனைத்து பகுதிகளிலும் படும்படி கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு இரவு தூங்குவதற்கு முன்பு செய்தால் நீண்ட நாள் பல் வலி வராமல் இருக்கும்.
வைத்தியம் 2 : நாம் அன்றாட பயன்படுத்தும் டீ பேக், இதுவும் பல்வழிப் போக்க உதவும் ஒரு பொருளாகும். நீங்கள் தினந்தோறும் பயன்படுத்தி வரும் டீ பேக்கை தூக்கி எறியாமல் ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். பிறகு உங்களுக்கு எப்போதெல்லாம் பல்வழி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அந்த டீ பேக்கை எடுத்து பல்லில் ஒத்தடம் விடுங்கள் . டீ பேக்கை பிரிட்ஜில் வைத்து தான் பயன்படுத்த வேண்டும் என்று கிடையாது, சூடாக நீங்கள் பயன்படுத்திய டீ பேக்கை கூட உங்கள் பல் பொறுத்துக் கொள்ளும் ஆனால் அந்த வெதுவெதுப்பான சூட்டுடன் கூட பற்களில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.
வைத்தியம் 3 : பூண்டு வைத்து பல் வலியை குணமாக்கலாம். பூண்டு பாக்டீரியாக்களை கொல்லும் தன்மை கொண்டது, அது மட்டுமல்லாமல் வலி நிவாரணையாகவும் பயன்படுகிறது. பூண்டை நன்றாக நசுக்கி அந்த பேஸ்ட்டை வலி இருக்கும் பற்களின் மேல் வைத்துக் கொள்ளவும். பூண்டுடன் உப்பும் கூட சேர்த்து வைத்துக் கொள்ளலாம். ஒரு பூண்டு எடுத்து வலிக்கின்ற பற்களின் கீழே வைத்து மெல்ல மெல்ல கடித்துக் கொள்ளுங்கள். இது பல் வலியை குறைக்கும்.
வைத்தியம் 4 : கிராம்பு. அனைவருக்கும் தெரியும் கிராம்பு ஒரு பல் வலி நிவாரணி. பல் வலித்தால் உடனே இரண்டு மூன்று கிராம்புகளை வாயில் வைத்து மெல்லுங்கள். இது பல் வலி மட்டுமல்லாமல் வாய் துர்நாற்றத்தையும் கட்டுப்படுத்த உதவும். கிராம்பு எண்ணெய் வலியையும் வீக்கத்தையும் குறைக்கும் ஆற்றல் கொண்டது. கிராம்பு எண்ணெயில் உள்ள யூஜெனோல் ஒரு சிறந்த ஆன்ட்டி செப்டிக்காக பயன்படும். கிராம்பு எண்ணையை நேரடியாக பற்களின் மீது பயன்படுத்தக் கூடாது. பருத்திப்பஞ்சில் ஒன்று அல்லது இரண்டு துளிகள் மட்டுமே கிராம்பு என்னை விட்டு அதை வலி மிகுந்த பற்களின் மேலே தடவிக் கொள்ளலாம். அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து நீர்த்துப்போக செய்து பிறகு பயன்படுத்தவும்.
ஒரு துளி அல்லது இரண்டு துளி கிராம்பு எண்ணையை நீரில் சேர்த்து மவுத்வாஷாகவும்பயன்படுத்தலாம்.