நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக தேவைப்படும் அனைவரும் நுக்கல் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதில் வைட்டமின் ஏ, மற்றும் வைட்டமின் டி3,கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளதால், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும், ஜீரண பிரச்சனைகளும், நார்ச்சத்து மிக அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனையும், மார்பக புற்றுநோய், மற்றும் மலக்குடல் புற்றுநோய், தாய்ப்பாலை அதிகரிப்பதற்கு போன்ற பலவிதமான நன்மைகளை நமக்கு தருகிறது இதனை பற்றி விரிவாக காண்போம்.
நூக்கல் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதன் பயன்பாடு:
நூக்கல் அல்லது நூல்கோல் என இரு பெயர்கள் உண்டு.
நூக்கலில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ கால்சியம் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதில் நீர் சத்து அதிகமாக உள்ளது. நீர் சத்து நமது உடலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நீர்ச்சத்து இருந்தால் மட்டும் உடம்பில் உள்ள அத்தனை உறுப்புகளும் சரியாக, அதனுடைய வேலையை செய்யும். நீர்ச்சத்து இல்லை என்றால் உடம்பில் உள்ள உறுப்புகளின் செயல் திறன் குறையும்.

நூக்கல் அதிகமாக சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை என்பது இருக்காது. செரிமான பிரச்சனை உருவாவதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகளை நன்றாக பற்களில் மென்னு உணவு குழாயில் அனுப்ப வேண்டும். இதன் பிறகு உமிழ்நீர் தன் சுரப்பிகள் மூலம் அந்த உணவுகளை நன்றாக உடலில் உள்ள மற்ற உறுப்புகளின் மூலம் சிறுகுடல் மற்றும் பெருகுடலுக்கு அனுப்பி விடும்.எந்த வேலையில் எதாவது ஒன்று தடைபட்டால் செரிமான பிரச்சனை உருவாகும் .
நம் உண்ணும் உணவில் உள்ள புரதச்சத்து,கொழுப்புச்சத்து,மாவுச்சத்து போன்ற சத்துக்களை பிரித்து, நமது ரத்தத்திற்கும் , உடல் வளர்ச்சிக்கும் , அனுப்பப்படுகிறது . மீதமான உணவுகளை செரிக்க முடியாமல் நாம் வயிற்றில் தங்கி விடும். அதனால் உடல் எடை கூடுதல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பலவித நோய்கள் நமக்கு வரும்.

நூக்கலின் அதிகமான கால்சியம் இருப்பதால் எது தசை பிடிப்பு மற்றும் எலும்பு சார்த்த பிரச்சனைகளை தீர்க்கும்.
நூக்கல் அடிக்கடி நம் உணவில் எடுத்துக் கொண்டு வந்தால் நமது சிறுகுடல் மற்றும் பெருகுடலில் ,தேங்கி உள்ள உணவுகளை செரிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
நுரையீரல் பிரச்சனைக்கு தீர்வு தரும் நூக்கல்
நுரையீரல் பிரச்சனைக்கு காரணம் வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற கிறுமிகளால் ஏற்படுகின்றன, மற்றும் புகைப்பிடிப்பது போன்ற மாசு குறைபாட்டினாலும் நுரையீரல் பிரச்சனை உருவாகும்.இதன் விளைவாக நுரையீரல் வீக்கம் நுரையீரல் செயல்திறன் மிகவும் குறைந்து வரும்.
இதனை சரி செய்வதற்கு நாம் நம் உணவில் ஊட்டச்சத்துக்கள் மிகுதியான உணவை எடுத்துக் கொள்வதன் மூலம், பிரச்சனையை சரி செய்யலாம். அந்த வகையில் நூல்கோளில் ஒமேகா பி3 அதிகமாக உள்ளது. நூல் கோளுடன் பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து உணவுடன் சாப்பிடும் பொழுது நுரையீரல் பிரச்சனையானது எளிதில் குணமடையும்.
மார்பக புற்று நோயை தடுக்கலாம்:
மார்பக புற்று நோய் வருவதற்கு காரணம் ஹார்மோன் சமநிலையாக இல்லாதது, மற்றும் மரபணுக்கள், வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து உள்ள உணவு பழக்கம்
இல்லாதது ,உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, மது மற்றும் புகை பிடித்தல் பழக்கங்களைக் கொண்டுள்ளதால்,போன்ற பலவித காரணங்களால் மார்பக புற்றுநோய் உருவாக்குகிறது.
மார்பக புற்றுநோயை தடுப்பதற்கு நமது உணவில்அதிகமான ஊட்டச்சத்துக்கள் தேவை வைட்டமின் ஏ,வைட்டமின் சி, கால்சியம், புரதம் மற்றும் மாவுச்சத்து போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டால் நமக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை கிடைக்கும் . புற்றுநோய் உண்டாக்கும் செல்களை அது அழித்துவிடும் அதனால் நமக்கு மார்பக புற்றுநோய் ஏற்படாது. நூல் கோள்களில் புற்றுநோயை அழிப்பதற்கான ஊட்டச்சத்துக்கள்.
தாய்ப்பால் அதிகரிப்பதற்கு நூக்கல் உதவும் :
தாய்ப்பால் சுரப்பியை அதிகரிப்பதற்கு புரோலாக்டின் என்ற சுரப்பி தேவைப்படுகிறது. புரோலாக்டின் சுரப்பி அதிகமாக சுரந்தால் பால் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்கும். இந்த சுரப்பியை அதிகப்படுத்துவதற்கு நூக்கல் உடன் பூண்டு,இஞ்சி போன்ற உணவுகளை சேர்த்து அதனை சாப்பிடும் பொழுது ஊட்டச்சத்துக்களானது அதிகமாக கிடைக்கும் என்பது உறுதி.
மலச்சிக்கலை சரி செய்யும் நூக்கல் :
வீட்டில் சமைக்கப்படும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், வெளியில் சாப்பிடும் அனைவருக்கும் இந்த மல கட்டானது அதிக நேரங்களில் வரக்கூடும். காரணம் வெளி உணவுகளில் என் அதிகமான எண்ணெய் மற்றும் மைதா போன்ற என்ற பொருள்களை, உணவின் சுவையை அதிகப்படுத்துவதற்காக இதனை அதிக அளவு பயன்படுத்துவர்கள் .
அதனை உண்ணும் அனைவருக்கும் மல சிக்கல் பிரச்சனை ஏற்படும். அந்நேரங்களில் இந்த மலச்சிக்கலை குறைப்பதற்கு ஒரு முறை நூக்கல் எடுத்துக் கொண்டால் இப் பிரச்சனையானது விரைவில் குறையும்.