முட்டைக்கோ
முட்டைக்கோஸ் நாம் அன்றாட வாழ்வில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான உணவுகளில் முட்டை கோஸ் ஒன்று . முட்டைக்கோஸில் அதிகமான நார்ச்சத்துக்களும், கார்போஹைட்ரேட்டும் மற்றும் வைட்டமின் சி, மெக்னீசியம், வைட்டமின் கே, வைட்டமின் ஏ, போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. முட்டைக்கோஸ் அதிகமாக எடுத்துக் கொள்வதால் கலோரிகளின் அளவை குறைக்கலாம்.
- முட்டைக்கோஸ் குளிர்காலங்களில் அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தொற்று கிருமிகளை அருகில் அண்ட விடாது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கு முட்டைக்கோஸ் பயன்படுகிறது.
- ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு முட்டைக்கோஸ் மிகவும் பயன்படுகிறது. முட்டைக்கோஸில் உள்ள பொட்டாசியம் , சிறுநீரகத்தில் உள்ள சோடியம் அளவை குறைக்கிறது. அதன் மூலம் சிறுநீரக பாதிப்பு எதுவும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
- புற்றுநோயை தடுப்பதற்கு பொட்டாசியம் ஒரு சிறந்த உணவு முறையாகும்.புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிப்பதற்கு முட்டைக்கோஸ் மிக சிறந்த உணவாகும். இதில் சல்பர் அதிகமாக இருப்பதால் அந்த செல்களை பரவ விடாமல் அழித்துவிடும்.
- சீரான இரத்த ஓட்டத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்..இந்த முட்டைக்கோஸ் அதிகமாக பயன்படுத்துவதால், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் நமக்கு ஏற்படாது. இதில் வைட்டமின் கே, மற்றும் அயோடின் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால், மூளை சார்ந்த பிரச்சினைகளும் நமக்கு வராது.

- ஒவ்வாமை உள்ளவர்கள் இதனை அடிக்கடி எடுத்துக் கொண்டால், இதில் உள்ள சத்துக்களின் மூலம் ஒவ்வாமை விரைவில் குணமாகிவிடும்.
- சிட்ரஸ் பழங்களை விட முட்டைக்கோஸில் அதிகமான அளவு வைட்டமின் சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் கொலாஜன் அதிகமாக இருக்கிறது.
- இதில் வைட்டமின் டி,வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் இருப்பதால் குடல் மற்றும் வயிற்றில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களை வெளியேற்றுவதற்கு உதவியாக உள்ளது.
முட்டைக்கோஸின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள்:
- அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைக்கோஸ்யை சாலட் உடன் மற்றும் முட்டைக்கோஸ் ஜூஸ் ஆகவும் பொரியல் ஆகவும் எடுத்துக் கொண்டால் அல்சர் விரைவில் குணமடையும்.
- குளுட்டோமைகள் அதிகமாக இருப்பதால்,உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி,கிருமிகளிடமிருந்து இருந்து நம்மை பாதுகாக்கிறது

- வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண்களுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை அதிகமாக கொடுக்கிறது. கண்புரை மற்றும் தெளிவற்ற பார்வை போன்றவற்றிலிருந்து நம்மை பாதுகாக்க முட்டைகோஸ் மிகவும் உதவுகிறது.
- மூளையில் உள்ள அடைப்பு (பிளாக் ) சரி செய்வதற்கு ஆன்ட்டி ஆக்சிடென்ட் தேவைப்படுகிறது. பச்சை காய்கறிகளில் அதிகமாக ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது பிளாக்கை சரி செய்ய உதவுகிறது.
- நார்ச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் அதிகமாக ஏற்படும். முட்டைகோஸில் அதிகமான நார்ச்சத்து இருப்பதனால் மலச்சிக்கல்,மலக்கட்டானது விரைவில் குணமாகும்.
- முகம் மற்றும் மேனி பளபளக்க வைப்பதற்கு முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் சி மிகவும் பயன்படும்.
- தசைப்பிடிப்பை குறைப்பதற்கு முட்டைக்கோஸில் உள்ள லாக்டிக் அமிலம் அதிகமாக உதவுகிறது.
- இதில் உள்ள கால்சியம் சத்துக்கள் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்த்து வைக்க மற்றும் எலும்புகளை வலுவாக்குவதற்கும் உதவுகிறது.
உடல் எடையை குறைக்கும் முட்டைகோஸ்:
உடல் எடை குறைப்பதற்கு திட்டமிடுபவர்கள் கண்டிப்பாக முட்டைக்கோஸ்யை அவர்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதில் கார்போஹைட்ரேடுகள் மிகவும் குறைவாக உள்ளது. இதை சிறிய அளவு எடுத்துக் கொண்டால் வயிறு நிறைந்தது போல தோன்றும் .இதன் மிகப்பெரிய பங்கு தேவையற்ற கொழுப்புகளை குறைப்பது ஆகும்.
முட்டைகோஸ் உணவில் அடிக்கடி எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும்.
நீரிழிவு நோய்க்கு பயன்படும் முட்டைக்கோஸ்:
- நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முட்டைக்கோஸ். காரணம் இதில் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை அதிகமாக உள்ளது.
- நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நச்சுக்கள் வெளியேறாமல் வயிற்றில் வீக்கமாக இருந்து விடும். அந்த வீக்கத்தை குறைப்பதற்கு உதவிக்கிறது .சிறுநீரக வழியாக எல்லா நச்சுக்களையும் வெளியே கொண்டு வரவும் முட்டைக்கோஸ் மிகவும் பயன்படுகிறது.
- முடி வளர்வதற்கு தேவைப்படும் அனைத்து சத்துக்களும் இந்த பச்சை காய்கறியான முட்டைக்கோஸில் அதிகமாக உள்ளது.
- முட்டைக்கோசை நீரில் வேகவைத்து அதனுடன் சீரகம் சேர்த்து குடித்து வந்தால், அதில் உள்ள சத்துக்களால் முகத்திற்கு பொலிவு கிடைக்கும் , மற்றும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
- மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள் முட்டைக்கோஸ் அதிகமாக எடுத்துக் கொண்டால் அப்பிரச்சினையானது விரைவில் குணமடையும்.
முட்டைக்கோஸ் இன் தீமைகள்:
- முட்டைக்கோசை மாதம் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொண்டால், அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்கு நன்மையை தரும்.
- தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் மலச்சிக்கல், எலும்பு போன்ற பிரச்சனை அதிகமாக உள்ளவர்கள், இதனை தினமும் எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம்.