Malai vembu benefits in tamil
மலைவேம்பு என்பது வேப்பமரத்து இனத்தைச் சார்ந்த ஒரு வகையான மூலிகை மரமாகும் . இந்த மலைவேம்பு மரத்தில் உள்ளம் ஒவ்வொரு இலை, வேர், பூக்கள் அனைத்துமே நமக்கும் மருத்துவ குணங்கள் சார்ந்தவை ஆகும். தலை முதல் கால் வரை உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த மலைவேம்பு இலை நல்ல தீர்வை கொடுக்கும்.
மலைவேம்பின் நன்மைகள்:

மலைவேம்பு இலை மூலம் மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு:
ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு பல காரணங்கள் உண்டு உடல் எடை அதிகரிப்பது, ஹார்மோன்கள் பிரச்சனை, மற்றும் மன அழுத்தம்,உடற்பயிற்சி இல்லாதது, பருவமடைதல், கருத்தரித்த பின் மாதவிடாய் நின்ற காலம், ஹார்மோன்கள் பிரச்சனை போன்ற பலவித காரணங்களில் மாதவிடாய் சுழற்சியானது ஒழுங்கற்ற முறையில் பல பெண்களுக்கு ஏற்படுகிறது.
இவ்வாறு ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையால் பிசிஓஎஸ், கர்ப்பப்பையில் நீர்கட்டி வருதல், கர்ப்பப்பையில் தசை அதிகரிப்பது, கர்ப்பப்பையில் வாய் புண் ஏற்படுவது, கர்ப்பப்பையில் செவிகளில் புண் ஏற்படுவது போன்ற பிரச்சனைகளும் சீறற்ற மாதவிடாய் சுழற்சியால் ஏற்படும் .
இந்த மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வாக இந்த மலைவேம்பு இலையில் பூண்டு,சீரகம், மிளகு போன்றவற்றை சேர்த்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது இந்த மாதவிடாய் பிரச்சனை ஆனது குணமடையும் மற்றும் எளிதில் கருத்தரிக்க உதவும் .
குறிப்பு :மாதவிடாய் பிரச்சனை வீட்டு வைத்தியத்தில் சரியாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.
மலைவேம்பின் மூலம் தோல் பிரச்சினைக்கு தீர்வு:
தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு காரணம் பூஞ்சை தொற்று மற்றும் பூச்சி கடி சருமத்தை கவனிக்காமல் இருப்பது, சுத்தமின்மை, அலர்ஜி உள்ள பொருட்களை எடுத்துக் கொள்வது, சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் தோல் சார்ந்த பிரச்சனையானது உருவாகிறது.
தோல் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் மலைவேம்பு இலையில் மஞ்சள் சேர்த்து அதனை பூஞ்சை தொற்று மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ள இடத்தில் தினமும் அதை பூசிக்கொண்டு வந்தால் தோல் பிரச்சினை ஆனது விரைவில் குணமடையும்.
மலைவேம்பின் மூலம் வயிற்று வலி தீர்வு:

அடிக்கடி ஹோட்டல் மற்றும் வெளியில் உணவுகளை எடுத்துக் கொள்ளும் அனைவருக்கும் இந்த வயிறு வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாதது இதற்கு மிகப்பெரிய காரணம். சுகாதாரமான முறையில் சமைக்கப்படாத உணவுகளை எடுக்கும் பொழுதும் வயிற்று வலியானது அடிக்கடி ஏற்படும்.
வயிற்றில் உள்ள கெட்ட கிருமிகளை அழிப்பதற்கும் புழுக்களை கொள்வதற்கும் மலைவேம்பு இலை மிகவும் பயன்படுகிறது.
மலைவேம்பின் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்:
மலைவேம்பின் பூக்கள் மற்றும் இலைகளில் அதிகமாக ஆக்சிஜனேற்றம் இருப்பதால் எதிர்ப்பு சக்தி திறன் ஆனது மிக அதிகமாகும் இருக்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் வாரம் ஒரு முறை இந்த இலையை எடுத்துக்கொண்டு வருவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகமாக பெறுவார்.
கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் மூட்டு வலி மற்றும் முழங்கால் வலி உள்ளவர்கள் இதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் மூலம் இந்த பிரச்சனையை எளிதில் குணமடைய செய்யலாம்.
சுவாச பிரச்சனை உள்ளவர்கள் இந்த மலைவேம்பு மரத்தை வீட்டில் வளர்ப்பதால் அவர்களுக்கு சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். அதன் மூலமாக அவர்களுக்கு ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராது. இதில் ஆக்ஸிஜனேற்றம் அதிகமாக இருப்பதால் அவர்கள் இதனை உணவிலும் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வரும்போது, எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.
உடலில் உள்ள நச்சுக்கிருமிகளை அழித்து உடலை சுத்தப்படுத்துவதற்கு இந்த மலைவேம்பு இலை மிகவும் உதவியாக இருக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவை ,சரியான அளவில் மேம்படுத்துவதற்கு இந்த மலைவேம்பு இலை மிகவும் உதவுகிறது .
உடல் சூடு மற்றும் தலையில் அதிகமாக பேன் உள்ளவர்கள் மற்றும் பொடுகு பிரச்சனை உள்ளவர்கள் அனைவரும் இந்த இலையை தலையில் தேய்த்து வந்தால் இப்பிரச்சனைகள் ஆனது விரைவில் குணமடையும் மற்றும் முடி வளர்வதற்கு உதவியாக இருக்கும்.