Homeமருத்துவம்குப்பை கீரை மற்றும் அதன் பயன்கள்|kuppaikeerai benifits in tamil

குப்பை கீரை மற்றும் அதன் பயன்கள்|kuppaikeerai benifits in tamil

குப்பைக்கீரையை சமையலில் சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பார்வை பிரச்சனை ஏற்படுவதில்லை.நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.. நரம்புகள் பலவீனமாக உள்ளவர்கள், இந்த கீரையை சாப்பிடும்போது நரம்பு மண்டலம் வலுப்பெறும் நரம்பு தளர்ச்சியும் நீங்கும்.நோயெதிர்ப்பு செயல்பாடுகளை அதிகப்படுத்தி, தோல் ஆரோக்கியத்தை காக்க இந்த கீரை பயன்படுகிறது.

முளைக்கீரை வகையை சேர்ந்தது குப்பைகீக்ரை ஆகும். இக்கீரை வருடம் முழுவதும் வளரக்கூடிய ஒரு கீரை வகை ஆகும். இது குப்பைக்கூலங்களில் தானாகவே வளர்ந்து இருக்கும் அற்புத கீரை… குப்பைகளில் வளர்வதாலும், குப்பை போன்ற உடம்பை தேற்றுவதாலுமே குப்பைகீரை என்றானது.

குப்பை கீரையில் முற்றிய இலைகளைவிட, தளிர்களைதான் சமையலுக்கு பயன்படுத்துவார்கள், நார்சத்து மிகுதியாக உள்ள இந்த குப்பைக்கீரையில், வைட்டமின் C, A, பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது.இந்த குப்பைகீரையானது தண்டுக்கீரை வகையைச் சார்ந்தது.. பார்ப்பதற்கு இந்த கீரை சாம்பல் நிறத்தில் இருக்கும். இதிலுள்ள பூக்கள் வெளிரிய சிவப்பு நிறத்தில் இருக்கும்.

உடல் சூடு தணிந்து சிறுநீர் நன்றாக பிரியும். உடலில் கட்டிகள், தழும்பு, மரு, முகப்பரு, கட்டிகள் இருந்தாலும், இந்த கீரையை வெறுமனே அரைத்து பூசும்போது, கட்டிகள் உடைந்துவிடும். உடல் வீக்கம் இருந்தாலும் இந்த கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் வீக்கம் குறைந்துவிடுமாம்.

பாம்பு, தேள் கடிக்குகூட இந்த குப்பைக்கீரையே விஷ முறிவு மருந்தாக திகழ்கிறது. 

உடல் உஷ்ணம் உள்ளவர்கள், இந்த கீரையை வாரம் 2 முறையாவது சமைத்து சாப்பிடலாம்.சருமத்திலுள்ள புண்கள், வயிற்றுப் புண்கள், வாய்ப்புண்கள் போன்றவற்றை அகற்றக்கூடியது குப்பைக்கீரை.

குப்பைக் கீரையுடன், துவரம் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால், குடல் புண்கள் குணமாகும். அதேபோல இந்த கீரையுடன் மிளகு, சீரகம் இரண்டையும் சேர்த்து, கஷாயமாக்கிக் குடித்தால், நன்றாக பசி எடுக்கும். இந்த கீரையுடன் சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும். பூண்டு, சீரகம், மஞ்சள் சேர்த்து, கஷாயமாக்கி குடித்தால் வாயுக் கோளாறுகள் குணமாகும். குப்பைக்கீரை, சீரகத்துடன், முடக்கறுத்தான் கீரையும் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் மூட்டுவலி, முழங்கால் வலி குணமாகும்.குப்பைக்கீரையுடன் மஞ்சள் தூள், அரை டீ ஸ்பூன் ஓமம் சேர்த்து நன்றாக காய்த்து அந்த சாற்றை பருகினால் நெஞ்சு எரிச்சல் குணமாகும். மற்ற கீரையை போலவே இதை பொரியல் செய்து சாப்பிடலாம். பருப்பு சேர்த்து கூட்டு போலவும் செய்யலாம்.. சத்தான அடை செய்யலாம்.. சாலட், சூப்களிலும் இந்த குப்பைக்கீரை இலையை பயன்படுத்தி பலன்பெறலாம்.

பருவ காலங்களில் வைரஸ் தொற்று அதிகரிக்கும் அந்த மாதிரி அச்சமயங்களில் குப்பை கீரையை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது நோய்களின் அபயத்தை குறிக்கிறது.

குப்பை கீரையில் கால்சியம் அதிகமாக உள்ளது அதனால் அதன் நுகர்வு எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கிறது குறிப்பாக குளிர்காலத்தில் மூட்டு வலியில் இருந்தால் நிவாரணம் அளிக்கிறது.

kuppaikeraai3

நார் சத்து நிறைந்த குப்பை கீரையை சாப்பிட்டால்

  •  மலச்சிக்கல்
  •  அமிலத்தன்மை
  •  வாயு 

போன்ற செரிமான பிரச்சனை இருந்தால் தீர்வு கிடைக்கும்.

  • குப்பை கீரையின் கலோரிகள் அளவு மிக குறைவாக உள்ளது.
  •  இதன் காரணமாக அதன் நுகர்வு இடையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.
  • குப்பைக் கீரையை உண்பதால்நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை ஏற்படுகிறது.
  •  இது அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது.
  • நார்ச்சத்துடன் குப்பை கீரையின் பைட்டோநியூட்ரியன்ட்கள் உள்ளது.
  • அவை ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டை அதிகரிக்கும்.
  • இது கொழுப்பு பிரச்சனைகளை குறைக்கிறது

 குப்பை கீரை சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை கட்டுக்குள் வைத்திருக்கும்.

 குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்தது.

குப்பை கீரையில் அதிகமாக வைட்டமின் ஏ வைட்டமின் சி உள்ளதால் இதனை அடிக்கடி எடுத்துக் கொண்டு வரும்போது கண்ணில் உள்ள சத்துக்களை அதிகரித்து கண்பார்வையில் தெளிவை கொண்டு வரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments