இரவு நேரத்தில் நாம் சாப்பிடும் உணவு எளிதான உணவாக இருக்க வேண்டும். அதாவது எளிதில் ஜீரணமாகும் உணவாக இருக்க வேண்டும். ஏனென்றால் பகல் பொழுதில் நம் சாப்பிடும் எந்த வகையான உணவாக இருந்தாலும் சரி நம் சாப்பிட்ட பிறகு ஏதோ ஒரு சில வேலைகளை செய்வது அல்லது நடப்பது என நமது உடல் உறுப்புகள் செயல்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால் எவ்வளவு கடினமான உணவாக இருந்தாலும் ஜீரணமாகும் சக்தியை பெரும். ஆனால் இரவில் நாம் கடினமான உணவுகளை எடுத்துக் கொண்டால் ஜீரண கோளாறு ஏற்படும். இரவு உணவிற்கு பின்பு கடின உழைப்பு என்பது இருக்காது. அது மட்டுமல்லாமல் சிலர் இரவு சாப்பிட்ட உடனே படுத்து உறங்கி விடுவார்கள்.இதனால் செரிமான கோளாறுகள் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கும். மேலும் சில உணவுகள் சாப்பிடுவதால் இரவு நேரத்தில்சிறுநீர் அதிகமாக வந்து கொண்டே இருக்கும்.இதனால் தூக்கமும் கெட்டுப் போகும். தூங்காமல் இருப்பது நமக்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும்.அதனால் எளிய உணவாக சாப்பிடுவதனால் நம் உடலின் ஜீரண உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்பட்டு அஜீரண கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.அதனால் இரவில் தவிர்க்க வேண்டிய சில முக்கிய உணவு பட்டியலை காண்போம்.
இறைச்சி உணவுகள்
இறைச்சியில் அதிகமான கொழுப்பு சத்தும் மற்றும் புரோட்டீனும் இருப்பதால் அதிக செரிமான ஆற்றல் தேவைப்படும். இரவு நேரத்தில் நம் உடலுக்கு அதிக உழைப்பு தராததால் இந்த செரிமான ஆற்றல் நமக்கு கிடைப்பதில்லை. இறைச்சி உணவுகள் செரிமானம் ஆவதற்கு மூன்று முதல் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் தேவைப்படும். இரவில் செரிமானம் ஆக இவ்வளவு மணி நேரம் யாரும் இதற்கென உழைக்க மாட்டார்கள்.
இதனால் இரவில் தூக்கமின்மை ஏற்படுகிறது அதுமட்டுமின்றி இரவில் அதிகப்படியான வாயுத் தொல்லையும் ஏற்படுகிறது. நம் தூக்கமும் கெட்டுப் போகிறது. அதனால் இரவில் இறைச்சி உணவுகளை தவிர்ப்பது நல்லது.
ஆனாலும் இறைச்சி சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் மாலை ஏழு மணிக்கு முன்பாகவே சாப்பிட வேண்டும். இரவு உண்பதற்கு ஒரு மணி நேரமோ அல்லது அரை மணி நேரத்திற்கு முன்பு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
டீ மற்றும் காபி
டீ மற்றும் காப்பியில் உள்ள காஃபின் (Caffeine) வயிற்றில் ஒரு வகையான அமிலத்தை உருவாக்கி மூளையை சுறுசுறுப்படைய செய்கிறது. இதனால் இரவு நேரத்தில் டீ, காபி குடித்தால் தூக்கம் வராது.
அது மட்டுமல்லாமல் பகலிலும் சரி சாப்பிட்ட உடனே டீ காபி குடித்தால் அதில் உள்ள காஃபின் நாம் சாப்பிட்ட உணவில் உள்ள சத்துக்கள் உடலை சேரவிடாமல் தடுத்து விடும். எனவே பகலிலும் சாப்பிட்ட பிறகு டீ காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
காரமான உணவுகள்
காரமான உணவுகளில் அதிக அளவு கலோரி மற்றும் கொழுப்பு சத்து நிறைந்திருக்கும். இதனால் செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. காரமான உணவுகளால் ஏற்படும் செரிமான கோளாறால் நெஞ்செரிச்சல் ஏற்படும். இதுபோன்ற உணவுகளில் அதிக அளவு கொழுப்பு இருப்பதால் இரவு நேரத்தில் நான் தூங்க தயாராகுவதற்கு ஏதுவாக உள்ள உடல் வெப்பநிலை குறைய தொடங்கும்.
அதனால் அன்றைய நேரத்தில் கார உணவுகளை நாம் சாப்பிடுவதால் உடல் வெப்பநிலை அதிகப்படுத்தி விடும்.அது மட்டுமல்லாமல் இது போன்ற கொழுப்புச்சத்துள்ள இரவு உணவுகளால் உடல் பருமன் அதிகரிக்கும். அல்சர் உள்ளவர்கள் காரமான உணவுகளை இரவில் சிறிதளவு எடுத்துக் கொள்வதை கூட தவிர்ப்பது நல்லது.அல்சர் உள்ளவர்கள் மட்டுமின்றி அனைவரும் இரவு நேரத்தில் அதிக காரமான உணவுகளை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்
காலையில் இட்லி தோசை என டிபனுக்கு செய்த சாம்பார் சட்னி குருமா கொன்றவைகளை ஃப்ரிட்ஜில் வைத்து இரவு நேரத்தில் செய்யும் டின்னருக்கு பயன்படுத்துவது தவறு. இது உடல் கோளாறுகளை ஏற்படுத்தும்.
பிரிட்ஜில் இருந்து எடுத்து வைத்து பிறகு அதை சூடு செய்து சாப்பிடுவதால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் இழந்து விடுகிறது. அது மட்டும் இன்றி பல நஞ்சுகள் உருவாகிறது. அதுமட்டுமின்றி இரவில் இது போன்ற பழைய உணவுகளை சூடு செய்து சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள் ஏற்படும்.
இரவு நேரங்களில் வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்க்க. இதனால் உடல் பருமன் ஏற்படும். உடல் கடகடவென உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். இதனால் உடலில் செரிமான கோளாறு ஏற்பட்டு இரவு தூக்கம் கெட்டுப் போகும்.
செயற்கை முறையில் செய்யப்பட்ட குளிர்பானங்கள்
அதிக அளவு கலோரிகளை கொண்ட செயற்கை கிளிக் பானங்களை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிப்பாளங்களில் அதிக அளவில் சர்க்கரை, கார்பன் டை ஆக்சைடு , பாஸ்போரிக் ஆசிட், காப்பின் செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள் உள்ளன.
அதிகமான அமில சத்துக்களை கொண்ட செயற்கை குளிப்பாளர்களா வயிறு கோளாறுகள் மற்றும் எரிச்சல் மற்றும் பல உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குளிர்பானங்களால் உடலுக்கு எந்த ஒரு நல்லதும் கிடைப்பதில்லை. இரவு நேரங்கள் மட்டுமின்றி பகலிலும் இதுபோன்ற செயற்கை புலிப்பாணங்களை தவிர்ப்பது நல்லது.