Homeமருத்துவம்ஐயோ!  தயவுசெய்து இந்த அஞ்சு பேரு பலாப்பழம் சாப்பிடாதீங்க! 

ஐயோ!  தயவுசெய்து இந்த அஞ்சு பேரு பலாப்பழம் சாப்பிடாதீங்க! 

முக்கனிகளில் வாயில் எச்சில் ஊரும் அளவிற்கு சுவையோ சுவை! ஆஹா அதன் சுவையை சொல்லில் அடக்க முடியுமா? பலாப்பழம், பேரை சொன்னாலே உதடுகள் இனிக்கிறது.பலாப்பழத்தில் பல நன்மைகள் உள்ளது.அப்படி என்றால் நன்மை உள்ள இந்தப் பலாப்பழத்தை அனைவரும் உண்ணலாமா என்று கேட்டால், அதற்கு பதில் கூடாது. ஆமாம் பலாப்பழத்தை அனைவரும் உண்ணக்கூடாது.இந்த ஐந்து பிரச்சனைகளை கொண்டவர்கள் பலாப்பழத்தை உண்பதை தவிர்க்க வேண்டும்.

ஒருவேளை அந்த ஐந்து பேரில் நாம் ஒருவராக இருந்து விடுவோமோ! என்று தானே அனைவரும் யோசிக்கிறீர்கள்? கீழே கொடுக்கப்பட்டுள்ள விரிவான தகவல்களைப் படித்து இந்த வரிசையில் நீங்களும் உள்ளீர்களா என்பதை தெரிந்து கொள்ளுங்கள் !

ரத்தப் பிரச்சனை அதாவது ரத்தம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி உங்களுக்கும் ஏதேனும் ரத்த வகையான பிரச்சனை இருந்தால் கண்டிப்பாக நீங்கள் பலாப்பழம் சாப்பிடவே கூடாது. எப்போதாவதுதான் பலாப்பழம் சாப்பிடவே நமக்கு கிடைக்கும் என்பதால் அதற்கு ஆசைப்பட்டு ஒன்று இரண்டு பழங்களை சாப்பிட்டால் கூட உங்களின் ரத்த சம்பந்தப்பட்ட பிரச்சனை  மேலும் அதிகரிக்க வாய்ப்பு. எனவே பலாப்பழம் சாப்பிடுவதை நீங்கள் முழுமையாக தவிர்க்கவும்.

நீங்கள் சரும அலர்ஜி கொண்டவர்களா? அப்படி என்றால் நீங்களும் பலாப்பழம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு மருத்துவர்கள் அறிவுரை கூறியிருப்பார்கள் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று. அதனால் முடிந்தவரை பலாப்பழம் சாப்பிடுவதே தவித்தாள் உங்களின் சருமத்திற்கு மிக நல்லது.

alergyand pregnantladies

பலாப்பழத்தில் அதிக நார் சத்துக்கள் உள்ளது. அதுமட்டுமின்றி விட்டமின் ஏ, விட்டமின் பி6, விட்டமின் சி, மற்றும் பல சத்துக்கள் உள்ளது இருப்பினும் பலாப்பழத்தை கர்ப்பமாக உள்ள பெண்கள் சாப்பிடக்கூடாது. பலாப்பழத்தை சாப்பிட்டால் குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் பின் விளைவுகள் மற்றும் சிக்கல் ஏற்படலாம்.

நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டவரா?? பலாப்பழத்தை தொட்டுக் கூட பார்க்க வேண்டாம். அறுவை சிகிச்சை செய்தவர்கள் அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களுக்குள் பலாப்பழம் எடுத்துக் கொண்டால் சிகிச்சை செய்த  புண் ஆறாது.உங்களின் சிகிச்சை போல் முழுமையாக ஆரியபின் மட்டுமே வேண்டுமானால்  கொஞ்சம் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பலாப்பழத்தை பக்கத்திலேயே வரவிட செய்யக்கூடாது. இது குழந்தையின் வயிற்றில் ஏதேனும் கோளாறு அல்லது குழந்தைக்கு குமட்டல் அல்லது வாந்தி போன்ற சில பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

 மேலே பட்டியல் இட்ட ஐந்து நபர்களை நீங்கள் இருக்கிறீர்களா என்று படித்து சோதித்து பார்த்து விட்டீர்களா? இந்த ஐந்து பிரச்சனைகளும் இல்லாத நபரா நீங்கள்? இன்னும் ஏன் காத்திருக்க வேண்டும். உடனே சென்று பலாப்பழத்தை வாங்கி சாப்பிட்டு ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வாழுங்கள். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments