Saranai keerai benefits in tamil
சாரணைக்கீரையின் பயன்கள் ஏராளமாக இருக்கின்றன. சாரணைக்கீரையை பலர் முக்கிரட்டை கீரை என்றும் அழைப்பார்கள். சாரணை கீரையின் முக்கிய சத்துக்களில் ஒன்று சிறுநீரக கற்களை கரைப்பது பற்களின் உறுதியை அதிகப்படுத்துவது ஈறுகளை பாதுகாப்பது சுவாசக் கோளாறுகளை தடுப்பது மற்றும் முகப்பரு,முகத்தின் வடுக்கள் போன்றவற்றை சரி செய்வது போன்ற பல நன்மைகளை கொண்டுள்ள.
சாரணைக்கீரையின் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் :
சாரணை கீரையின் மூலம் சிறுநீரக கற்களை கரைக்கலாம்:

சிறுநீரக கல் என்பது சிறுநீரகப் பையில் திடமான உருவாகும் பொருள்.அது ஒரு கனிமம் ஆகும் இது சிறுநீர் குழாய் வழியாக சிறுநீரகம் வெளியேறும் போது வலியையும் ,அசௌகரித்தையும் ஏற்படுத்தும். சிறுநீரக கல் உருவாவதற்கு காரணம் போதுமான தண்ணீர் எடுக்க எடுத்துக் கொள்ளாதது.
மரபியல் சார்ந்த பிரச்சினைகள்,உணவு முறையில் சத்தான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, போன்ற பலவித காரணங்களால் சிறுநீரக கல்லானது ஏற்படுகிறது. இவ்வாறு சிறுநீரகக் கல் உள்ளவர்கள் அனைவரும் சாரனை கீரையை வாரம் இரு முறை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனையை தீர்க்கலாம்.
சுவாசக் கோளாறுகளை சரி செய்யும் சாரணை கீரை:
சுவாச கோளாறு பெரியவர்கள் முன்னால் சிறியவர்களாக வரை அனைவருக்கும் இக்காலத்தில் உருவாகின்றனர். இதற்கு காரணம் மாசற்ற சூழலில் அதிகமாக இருப்பது, ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ளாமல் இருப்பது, ஆஸ்துமா போன்ற பிரச்சனை உருவாவதற்கு காரணம்.
நுரையீரலில் உள்ள ஒரு சிறிய காற்று பகுதியில் வீக்கம் ஏற்படுவது அதன் மூலமாக மூச்சு திணறல் ,மார்பு இருக்கம் , போன்றவை ஏற்பட்டால் ஆஸ்துமா வருவதற்கான அறிகுறிகள் என நாம் புரிந்து கொள்ளலாம்.
2019 ஆஸ்துமா 260 மில்லியன் மக்களை பாதித்துள்ளது 4,50,000 இறப்புகளை ஏற்படுத்தி உள்ளது இந்த ஆஸ்துமா நோய்.ஆஸ்துமாவில் இருந்து நம்மளை பாதுகாத்துக் கொள்ள அதிகம் தூசி புகை விலங்குகளின் ரோமம் சோப்புகள் வாசனை அதிகமான திரவங்களை, பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்க்கலாம்.
உணவில் அதிக ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அந்த வகையில் சாரணைக்கீரையில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகமாக உள்ளது மாதம் இரண்டு முறை இந்தக் கீரை எடுத்து வருவதால் நமக்கு ஆஸ்துமா பிரச்சனையானது வராது.

ஈறுகள் மற்றும் பற்களை வலுப்படுத்துவதற்கு சரணைக்கீரை பயன்படுகிறது:
பற்களில் உள்ள ஈறுகள் வீக்கம் அடைவது , வலுவை இழப்பதற்கும் காரணம் நாம் அதிகமாக இனிப்பு மற்றும் அமிலத்தன்மை உள்ள உணர்வுகளையும் மற்றும் குளிர்பானங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் கிருமிகள் அதிகமாக உருவாகிறது இந்த கிருமிகளும் பாக்டீரியாக்களும் பற்களில் உள்ள எனாமல் சத்தை குறைக்கிறது.
இதன் மூலம் பற்கள் வலுவடைந்து,பூச்சிகள் மிகுந்தம் காணப்படுகிறது. இதனால் பற்களை அகற்றுவது மற்றும் பல் வலி ,பற்களில் ரத்தம் வடிதல், போன்ற பல பிரச்சனைகள் வருகின்றன.
இதனை தடுப்பதற்கு உணவுகளில் அதிகமான பழங்கள் காய்கறிகள் நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.அந்த வகையில் சாரணைக்கீரையில் அதிகமான சத்துக்கள் இருப்பதால் இப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சாரணைக்கீரை:
முகப்பரு ஏற்படுவதற்கு காரணம் முகத்தில் அதிகமான எண்ணெய் சுரப்பி இருப்பதாலும் பாக்டீரியா தொற்று, மற்றும் உணவுப் பழக்கத்தில் ஊட்டச்சத்துக்கள் இல்லாதது, மற்றும் ஹார்மோன்கள் மாற்றம், போன்ற பல காரணங்களால் சரும பிரச்சனையானது ஏற்படுகிறது.
சரும பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு தூய்மையான நீர் மற்றும் உடல் சுத்தம் மிகவும் அவசியம். எண்ணெய் அதிகம் உள்ள பொருட்களை உணவில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, மற்றும் கொழுப்புச் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.
ஊட்டச்சத்துக்கள் அதிகமான கீரைகள் பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதின் மூலம் உடலுக்கு தேவைப்படும் அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இந்தக் சாரணைக்கீரையை எடுத்துக்கொண்டு வரும்போது முகத்தில் உள்ள சரும பிரச்சனைகள் அனைத்தும் தீரும்
பித்தநீரை அகற்ற உதவும் சாரணை கீரை:
பித்தப்பை நம் உடலுக்கு மிகவும் தேவையான ஒரு உறுப்பாகும். இதில் பிரச்சனைகள் ஏற்படதால், நம் வாழ்க்கையை நாம் இழக்கக்கூடும். பித்தப்பை தனது செரிமான வேலையை சரியாக செய்யும்பொழுது, சிறுகுடல் மற்றும் பெருகுடல் அதனுடைய வேலையும் சரியாக செய்யும். அதன் பின்பு சிறுநீரகம் மலம் போன்ற ,நம்ம உடலுக்கு தேவையற்ற கழிவுகளை, வெளியேற்ற உதவியாக இருப்பது இந்த பித்தப்பை
பித்தப்பையில் கிருமி தொற்று அதிகமாக ஏற்பட்டால், நாம் பித்தப்பையை அறுவை சிகிச்சை மூலமாக பித்தப்பையை எடுக்க வேண்டி வரும்.அதனால் நம் வாழ்வியல் மாறுபடும், உணவு பழக்கவழக்கங்கள் மாறுபடும், நாம் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும் .
பித்தப்பை பாதிப்பை தடுப்பதற்கு நமது உணவில் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இதனை தடுக்கலாம் .ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவை சாப்பிட வேண்டும். அந்த வகையில் சாரணைக்கீரையில் பித்தப்பை நீரை சேரவிடாமல் ,தடுப்பதற்கான ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. சாரணை கிரையை எடுத்துக் கொள்வதன் மூலம் பித்தப்பை பாதிப்பை தவிர்க்கலாம்.