Homeமருத்துவம்பரட்டை கீரையின் நன்மைகள்|parattai keeraiyin nanmaikkal in tamil

பரட்டை கீரையின் நன்மைகள்|parattai keeraiyin nanmaikkal in tamil

வெளிநாட்டினர் அதிகம் உபயோகிக்கும் கீரையாக இது திகழ்ந்து வருகிறது. ஒரு கப் பரட்டைக்கீரையில், K, A, C, B1, B2, B3, B6 வைட்டமின்கள், கால்சியம் மேங்கனீஸ், மெக்னீஷியம், காப்பர், பொட்டாஸியம், இரும்புச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகள் ஏகப்பட்டவை நிரம்பி உள்ளன. 

நோய் எதிர்ப்பு பரட்டை கீரை பல விதமான மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு கீரை வகையாகும் .இந்த கீரைகளின் இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இயற்கையை இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது. சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

இலைகள் நீளமாகவும், அகலமாகவும், மிருதுவாகவும் இருந்தாலும், சுருட்டை வடிவிலேயே காணப்படும். அதனால்தான், இதற்கு பரட்டைக்கீரை என்று பெயர் வந்ததாம். 

சரும வியாதிகள், காயங்கள் நமது உடலில் மேற்புறத்தை காக்கும் தோலை பல வகையான தொற்று நோய்கள் பாதிக்கின்றன. மேலும் காயங்களும் ஏற்படுகின்றன.

பரட்டை கீரையை நன்றாக அரைத்து கொண்டு ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்திருக்கும் பரட்டை கீரையை சேர்த்து, சிறிது மஞ்சள் பொடி சேர்த்து தைலப்பதத்தில் நன்கு காய்ச்சவும்.இந்த தைலத்தை பயன்படுத்துவதால்புண்கள் ஆறும். 

தோல் நோய்கள் நீங்கும். வெட்டுக்காயங்கள் ஆறி அடையாளம் தெரியாமல் மாறும்- முள், கண்ணாடி துண்டு குத்தல் நமது உடலில் மிகவும் மென்மையான பகுதியாக கால் பாதங்கள் இருக்கின்றன.

parattai

வெளியில் எங்கு செல்லும் போதும் கால்களில் செருப்பு அணிந்து கொள்ள செல்வதால் பாதங்கள் காயப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. ஒரு சிலருக்கு பாதங்களில் முள், கண்ணாடி, இரும்பு ஆகியவற்றின் மிக நுண்ணிய துண்டுகள் பாதங்களில் குத்திக்கொண்டு புண்களை ஏற்படுத்துகின்றன

பரட்டைக் கீரையை நன்கு அரைத்து, இப்படி முள், கண்ணாடி குத்திய இடத்தில் வைத்து கட்டினால், ஒன்றிரண்டு நாட்களில் குத்திய முள், கண்ணாடி துண்டுகள் போன்றவை வெளியேறிவிடும்.

இதயம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கு ரத்தத்தை பாய்ச்சும் பாய்ச்சும் உறுப்பான இதயத்தில் சிலருக்கு அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு, இதயம் தற்காலிகமாக செயலிழப்பது போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

பரட்டை கீரையை தினந்தோறும் உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது.

உடல் எடை குறைப்பு கட்டுப்பாடில்லாமல் எந்த வகையான உணவுகளையும் உண்பது, சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை உடல் பருமன் ஏற்படுவதற்கு அதிகம் காரணமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி பரட்டை கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்

மனிதர்கள் அனைவருக்குமே அவர்களின் வயதை பொறுத்து ரத்த அழுத்தம் மாறுபடுகிறது. ரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்க ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை கடைபிடிக்க வேண்டும். பலரையும் உயர் ரத்த அழுத்தம் மற்றும், குறைந்த ரத்த அழுத்தம் நோய் இன்றைய காலங்களில் பாதிக்கிறது.

இப்பாதிப்பு ஏற்பட்டவர்கள் பரட்டை கீரையை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த குறைபாடுகள் வெகு விரைவில் நீங்கும்.

நீரிழிவு நமது உடலில் எப்பொதும் நீர் சத்து ஒரு குறிப்பிட்ட அளவில் இருப்பது உடல் நலத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுலபத்தில் நீர் சத்தையும், உடல் பலத்தையும், ரத்தத்தில் அவசியமான சத்துக்களையும் இழந்து விடுகின்றனர். இவர்கள் கட்டயாம் சாப்பிட வேண்டிய ஒரு கீரை வகையாக பரட்டை கீரை இருக்கிறது

உணவாக இருக்கிறது.

வயிற்று புண்கள் காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. 

இது உணவை செரிமானம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பரட்டை கீரையை கூட்டு,பொரியல் போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது.

கடுமையான மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது. சிறுநீரகம் அதிகம் உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் நிலையை உண்டாக்குகிறது.

parattaikeerai 1

பரட்டை கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். சிறுநீரை நன்கு பெருகி உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும். எலும்புகள் நமது உடலில் எலும்புகள் பலமாக இருக்க வேண்டியது அவசியம். 

அனைவருக்கும் வயதாகும் காலத்தில் எலும்புகளின் உறுதி தன்மை குறைந்து கொண்டே வரும். பரட்டை கீரையில் எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுவடையச் செய்யும் சத்துகள் அதிகம் இருக்கின்றன. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பரட்டை கீரையை பக்குவம் செய்து சாப்பிடுவதால் எலும்புகள், பற்கள், மூட்டுகள் வலுவடையும்.

 உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை தாராளமாக பயன்படுத்தலாம்.. காரணம், நல்ல கொழுப்பின் அளவை அதிகப்படுத்தி, கெட்ட கொழுப்பை குறைப்பதில், பரட்டைக்கீரை பெரும்பங்கு வகிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவும் சீராக இருக்கிறது. நீர்ச்சத்தும், நார்ச்சத்தும், இந்த கீரையில் அதிகமாக இருப்பதால் செரிமானம் சீராக நடக்கிறது.

இந்த கீரைக்கு அடுத்தபடியாக, உடலிலுள்ள கொழுப்புகளை கரைக்க கூடியது பரட்டைக்கீரை எனலாம். கசப்பு அதிகம். சிறந்த சத்துக்கள் இந்த கீரையில் நிரம்பி உள்ளது .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments