Thoiya keerai benefits in tamil
தொய்யா கீரையில் உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வித ஊட்டச்சத்துகளும் உள்ளது. தொய்யா கீரையை, தொய்யல் கீரை,துயிலி கீரை என பெயர்களில் அழைப்பார்கள். இது காடுகள் அதிகமாக உள்ள இடத்தில் தானாகவே தானாகவே வளரக்கூடிய பண்பைக் கொண்டுள்ளது. இதிலுள்ள நன்மைகள் ஏராளம் மற்றும் மருத்துவ குணங்கள் வாழ்ந்தவை.
தொய்யா கீரையின் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தொய்யா கீரை:
நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாக இருந்தால்,உடலில் அடிக்கடி சளி, காய்ச்சல்,இருமல், செரிமான பிரச்சனை, உடல் சோர்வு,உடல் தளர்ச்சி, மற்றும் தொடர்ச்சியான தொற்று நோய்களின் பிரச்சனைகள், மன அழுத்தம் மற்றும் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்தல், செல்களில் வீக்கம் அடைதல், தொண்டை புண் போன்ற பலவித பிரச்சனைகள் நமக்கு எளிதாக வரும்.
இப்பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கு நமது உணவில் ஊட்டச்சத்துக்கள் மிகுதியான உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துக்கள் மிகுதியான உணவுகள் கீரைகளில் அதிகமாக உள்ளது. தொய்யா கீரையில் அதிகமான இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு அதிகப்படுத்துகிறது.

வாத நோய்க்கு பயன்படும் தொய்யக்கீரை :
வாத நோய் வருவதற்கு முக்கிய காரணம் ஆட்டோ இம்யூன் கோளாறு குறைவாக இருப்பதால், உடலில் பாதிப்பை ஏற்படுத்தி, நாளடைவில் மூட்டு வலி தசைகள் தளர்ச்சி, வீக்கம் அடைதல், விரைப்பு அடைதல் போன்ற அசோகரிகளை நமக்கு உணர வைக்கும்.
இதன் மூலமாக வாத நோய் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருந்தால் இவ்வித எந்த ஒரு நோயும் நமக்கு வரா வராது .இதனை தடுப்பதற்கு தொய்யல் கீரையை அல்லது தொய்யா கீரையை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்வதால் இதில் இருந்து விடுபடலாம்.

மகப்பேறு காலத்தில் பயன்படும் தொய்யக்கீரை
மகப்பேறு காலத்தில் தாய் சேய் இருவரின் உடலுக்கும் இரும்புச் சத்துக்கள் மற்றும் புரதம் வைட்டமின்கள், தாதுக்கள், அதிகமான தண்ணீர் மற்றும் 8 மணி நேரம் தூக்கம், உடற்பயிற்சி ஆகியவை மிகவும் முக்கியமானதாகும். கீரை வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் அவர்களுக்கு புரதச்சத்து அதிகமாக கிடைக்கும். நார்ச்சத்துக்களை அதிகரிப்பதற்கும் கீரை வகைகளை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சத்துக்கள் அதிகமாக இருந்தால் மலச்சிக்கலை தவிர்க்கலாம்,கால் வீக்கத்தை தவிர்க்கலாம், மற்றும் ரத்தக்குறைவதை தவிர்க்கலாம். இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் தொய்யா கீரையானது அதிகமான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவாகும் இதனை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்வதன் மூலம் பிரசவம் மிகவும் எளிதாகவும் பிரசவ காலத்திற்கு பின் தாய்ப்பால் அதிகரிக்கும்.

நரம்பு பிரச்சனைகளை குணப்படுத்தும் தொய்யக்கீரை
நரம்பு மண்டலத்தின் தசை பலவீனமாக அடைவதால், உடல் சோர்வு,கூச்ச உணர்வு,தலைசுற்றல், தூக்கமின்மை ,கை கால் வலி, உடலில் நடுக்கம் இதயத்துடிப்பு அதிகரித்தல், பதற்ற நிலையில் இருப்பது, போன்ற பிரச்சனைகள் நரம்பு தளர்ச்சியின் மூலம் உடலுக்கு ஏற்படுகிறது.
இதனை குறைப்பதற்க்கு உணவில் கீரை வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.அந்த வகையில் தொய்யல் கீரையில் நரம்பு தளர்ச்சி குணப்படுத்தக்கூடிய அனைத்து ஊட்டச்சத்துகளும் அதிகமாக உள்ளது.
வாரம் இரண்டு அல்லது மூன்று முறையை எடுத்துக் கொள்வதன் மூலம் பிரச்சனைகளை சரி செய்யலாம். தொய்யா கீரையில், மஞ்சள் தூள், வெந்தயம், ஜாதிக்காய் போன்றவை சேர்த்து உணவில் எடுக்கும் பொழுது, நரம்பு பிரச்சனை ஆனது விரைவில் குணமடையும்.