Homeமருத்துவம்பாட்டி வைத்தியம் : விக்கல் நிற்கவில்லையா? இந்த டிப்ஸ ட்ரை பண்ணி பாருங்க!

பாட்டி வைத்தியம் : விக்கல் நிற்கவில்லையா? இந்த டிப்ஸ ட்ரை பண்ணி பாருங்க!

நன்றாக நகரும் நிமிடங்களை எரிச்சல் ஊட்டும் விதமாக மாற்றி அமைக்கும் திறன் கொண்டது விக்கல். ஜீரண மண்டலத்தில் ஏதேனும் பிரச்சனை அல்லது சிக்கல் ஏற்பட்டால் அதன் வெளிப்பாடு விக்கலாகும். வயிற்றுக்கும் மார்புக்கும் இடையே ஒரு தடுப்பு சுவர் உள்ளது. இந்த தடுப்பு சுவறானது நுரையீரலையும் வயிற்றுப் பகுதியையும் தனித்தனியாக பிரிக்கும். இந்த சுவரானது மேலும் கீழுமாய் இயங்கி, நாம் மூச்சை இழுக்கும்பொழுது நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது.

நாம் மூச்சு விடும் பொழுது இந்த சுவரானது மேலும் கீழுமாய் இயங்கிக் கொண்டிருக்கும். அந்த நேரத்தில் சில சமயங்களில் நமது குரல் வளையானது மூடிக்கொள்ளும். அப்பொழுதுதான் இந்த விக்கல் உருவாகிறது.

விக்கல் ஏற்பட காரணங்கள் : 

சிலர் வயிறு முட்ட சாப்பிடுவதனால் விக்கல் வரும். அதே போல் சிலருக்கு வயிறு நிரம்ப தண்ணீர் குடித்தாலும் விக்கல் வரும்.

கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு விழுந்து விழுந்து வயிறு வலிக்க சிரிப்பதனால் கூட  விக்கல் வரும்.

நீண்ட நேரம் பசியால் இருப்பவர்களுக்கு, உணவு கிடைத்தால் அதை அவர்கள்  லபக் லபக்கு  என்று விழுங்குவதால் விக்கல் வரும். 

திடீர்உணர்ச்சி வெடிப்புகள், மது குடித்தல், புகைபிடித்தல் என பல  காரணங்கள் உள்ளது.

உளவியல் பிரச்சனை மற்றும் மன அழுத்தம் காரணமாகவும் சிலருக்கு விக்கல் ஏற்படும்.

drink water

விக்கல் நிற்க ஏதேனும் சிகிச்சை உண்டா?

மக்கள் என்பது இயற்கையான ஒரு வெளிப்பாடு. இதனை உருவாக்க முடியாது. மக்கள் வருவது போல் டப்பிங் வேண்டுமானால் செய்யலாம். ஆனால் உண்மையில் விக்கல் வரவழைக்க முடியாது. விக்கல் என்பது ஒரு தற்காலிகமானது. விக்கல் மீதான ஆராய்ச்சி என்பது குறைவாகவே உள்ளது. சில நிமிடங்கள் மட்டுமே வரும் விக்கலுக்கு என்று எந்த ஒரு தனி ஆராய்ச்சியும் இல்லை.அதனால் விக்கல் நிற்க ஏதேனும் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட சிகிச்சை இருக்கிறதா என்றால் அதற்கு பதில் இல்லை.

சிலருக்கு இரண்டு நாட்கள் தாண்டியும் விக்கல் நிற்காத சூழ்நிலையில் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கல் வருபவர் என்ன செய்வார்.வேறு வழியில்லை. நம் முன்னோர்கள்  பின்பற்றிய சில வழிமுறைகளை மட்டுமே பயன்படுத்தி விக்கல்களை கட்டுப்படுத்த வேண்டும். அதன்படி நாமும் இப்பொழுது பாட்டி வைத்திய முறையில் விக்கல் நிற்கும் வழிமுறைகளை காண்போம்.

hold your breath

விக்கல் நிற்க எளிய வழிமுறைகள்

பொதுவாக விக்கல் வந்தால் நாம் அனைவரும் தண்ணீர் குடிப்போம் இது இயல்பான ஒன்று.. அக்காலத்தில் உள்ள பாட்டிமாக்கள் தண்ணீரை மடக்கு மடக்கு என்று குடிக்க சொல்வார்கள். இப்படி தண்ணீரை குடிப்பதன் மூலம் விக்கல் நிற்கும்.

 ஆனால் சிலருக்கு தண்ணீர் குடித்தும் விக்கல் நிற்காது. 

விக்கல் வந்தால் வாயில் இரண்டு ஸ்பூன்  வெள்ளை சர்க்கரை  அள்ளிப் போட்டு மென்று 4 முதல் 7 மடக்கு தண்ணீர்  கொடுத்தால் விக்கல் நிற்கும் என்பார்கள்.

விக்கல் நிற்க மேலும் சில வழிமுறைகள் உள்ளன. ஒரு டம்ளரில் அரை டம்ளர் மட்டும் தண்ணீர் எடுத்துக் கொண்டு, 90 டிகிரி கீழே குனிந்து, உங்கள் காலும் இடுப்பும் செங்குத்தாக இருக்க வேண்டும். உங்கள் முகம் தலையை நோக்கி குனிந்து இருக்க வேண்டும்.வழக்கமாக நாம் குடிக்கும் பக்கத்தில் வாய் வைத்து குடிக்காமல் அதற்கு எதிர் பக்கத்தில் வாய் வைத்து குடிக்க வேண்டும். 

water hiccups

உங்கள் மூக்கை பிடித்துக் கொண்டு உங்கள் தண்ணீரில்  எட்டு சிப்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். மெதுவாக குடிக்காமல் கடகடவென குடிக்க வேண்டும்.

ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்துக் கொண்டு, தண்ணீரை விழுங்க வேண்டாம். வாயில் மட்டும் வைத்துக் கொள்ளவும்.  வாயில் தண்ணீருடன் உங்கள் தலையை பின்னோக்கி சாய்த்து கொள்ளவும். கண்களை மேல் நோக்கி பார்க்க வேண்டும் இமைகளை மூடக்கூடாது. பிறகு உங்கள் மூக்கை நன்றாக மூடிக் கொண்டு தண்ணீரை விழுங்கவும்.

hicuups trik
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments