மருத்துவத்திற்கும் சமையலுக்கும் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் சோம்பு கீரையானது மிக அபூர்வமான கீரையாகும். ஏனென்றால் இதன் மனம் மிகவும் அருமையாக இருப்பதனால்,இதனை அதிக பேர் சமையலுக்கு பயன்படுத்தி கொள்வார்கள்,மற்றும் மருத்துவத்திற்கும் அதிகமாக பயன்படுத்தப்படும் .இதனை சோம்பு கீரை அல்லது வெந்தயக்கீரை என்றும் அழைப்பார்கள்.
ஆசியா மற்றும் தெற்கு ரஷ்யாவை பூர்வீகமாக கொண்ட இந்த சோம்புக்கீரை, இன்று உலகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் இந்த சோம்பு கீரையானது பரவி உள்ளது.
“கீரை வகைகளில் சோம்பு கீரையானது மிகவும் நறுமணம் மிக்க கீரையாக என விளங்குகிறது”
முன்னொரு காலத்தில் கிரேக்கர்களும், எகிப்தியர்களும்,சோம்பு கீரையினை அதிகமாக பயன்படுத்தி வந்தனர். அவர்கள் போரின் மூலம் ஏற்பட்ட வலிகளை தீர்க்கவும்,போரினால் ஏற்படும் துயரத்தின் போது தூக்கமின்மை ஏற்படும் அதனை தீர்க்கவும்,இந்த சோம்புக் கீரையை கிரேக்கர்களும், எகிப்தியர்களும் மிக அதிகமாக பயன்படுத்தினர்.
உலகில் முதல் இடத்தில் இருக்கும் கீரை வகைகளான சோம்புக்கீரை ஒன்று.அதிகமாக சூப்பிலும் சேலங்களிலும் அதிகமாக இதனை பயன்படுத்தி மக்கள் சாப்பிடுகிறார்கள் என்பது உலகம் ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டதாகும்.
கீரையில் உள்ள சத்துக்கள்:
வைட்டமின் ஈ, வைட்டமின் சி,மற்றும் வைட்டமின் பி6 போன்ற பல சத்துக்களும்,இரும்புச்சத்து,மங்குனிஸ் மற்றும் மேக்னீசியம் ,பொட்டாசியம், சோடியம்,ஜிங்க், என உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சோம்பு கீரையில் உள்ளது.இதனால் மனிதர்கள் இதை அதிகமாக சாப்பிடுகிறார்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

sombu keerai benefits in tamil
150 கிராம் சோம்பு நிலையில் 60 கிராம் கலோரிகள் உள்ளன. இதனால் 5 கிராம் வரை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள், விரைவில் கிடைக்கும் மற்றும் எதிர்ப்பு சக்தியும் உண்டாகும்.
எண்ணற்ற சத்துக்களும், தாதுக்களும் காணப்படுகின்றன. இது காய்ச்சல், இருமல், சளி, குடல் பிரச்சனை,வாதம்,போன்ற அனைத்து விதமான நோய்களுக்கும் இது மிகச் சிறந்தது மருந்தாக விளங்குகிறது.
பெண்களுக்கு கர்ப்பப்பை மற்றும் மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் சோம்பு கீரை:
பெண்கள் சோம்பு கீரையை அதிகமாக எடுத்துக் கொள்வதால் அவர்களின் கர்ப்பப்பையில் ஏற்படும் அழுக்குகளை வெளியேற்றுவததற்க்கு மிகவும் உதவியாக இருக்கும்.வெளியேறி விட்டாலே பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருக்காது.அதனால் அவர் கருத்தரிக்க எந்த ஒரு தடையும் இருக்காது.அது மட்டும் பிசிஓடி,பிசிஓஎஸ், எந்த மற்ற பிரச்சனைகளுக்கும் பெண்களுக்கு அண்டாது.
தாய்ப்பாலை அதிகப்படுத்தும் சோம்பு கீரை:
இப்போதைய சூழ்நிலையில் அதிகமான பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பி என்பது மிகவும் குறைவாக உள்ளது. அதற்கு காரணம் அவர்கள் கர்ப்ப காலத்திலும், அதற்கு முன் காலத்தில் சரிவர சத்துக்கள் அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்ளாதது, தான் காரணம். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த சோம்பு கீரையை அதிகமாக எடுத்துக் கொண்டால், குழந்தைக்கு மிகவும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் கிடைக்கக்கூடிய தாய்ப்பால் அதிகமாக கிடைக்கும்.
சோம்பு மற்றும் சோம்பு கீரையை சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து, பின்பு அது ஆறியவுடன் அதனை பருக்கிக் கொண்டால் தாய்ப்பால் சுரப்பியானது அதிகமாக சுரக்கும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த சோம்பு கீரையை எடுத்துக் கொண்டால், அவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும், அதன் மூலமாக அவர்கள் நிலையான சர்க்கரை அளவினை உடலில் பெறுவார்கள்.
வயிற்று பிரச்சனையை குணப்படுத்தும் சோம்புக்கீரை:
வயிற்று பிரச்சனைகளில் பல உள்ளன அதில் ஒன்று வயிற்றில் உள்ள கழுகுகள் சரிவர வெளியேறாமல் இருப்பதால் அதில் கல் மற்றும் பிரச்சனைகள் ஏற்படும் இந்த சோம்பு கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் அவ்விதமான பிரச்சனைகள் உடனடியாக குறையும். எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
சிறுநீரகப் பிரச்சனையை சரிப்படுத்தும் சோம்பு கீரை;
சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட காரணமாக இருப்பது,அதிகமான தண்ணீர் எடுத்துக் கொள்ளாததுதான். அவ்வாறு சிறுநீரகப் பிரச்சனை,மற்றும் சிறுநீரகத்தில் கல் ஏற்படும் போது,இந்த சோம்பு கீரையை உணவில் எடுத்துக் கொண்டால்,சிறுநீரக கல்லானது கரைந்து சிறுநீரகம் வழியாக வெளியேறிவிடும்.
உடல் பலவீனமாக உள்ளவர்கள் மற்றும் உடல் எடையை குறைப்பவர்கள் இந்த சோம்பு கீரையை அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். அதன் மூலம் அவர்களின் உடம்பில் உள்ள பலவீனத்தை குறையும். மற்றும் சராசரியான உடல் எடையை இருப்பதற்கு உதவுகிறது.
மஞ்சகாமாலை உள்ளவர்களுக்கு சோம்பு கீரையை,அவர்களது பத்திய சாப்பாட்டில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக்கொண்டே வந்தால், மஞ்சக்காமலையின் வீரியம் உடலில் இருந்து மெல்ல மெல்ல குறையும். அதனை தொடர்ந்து எடுத்துக்கொண்டே வரும்போது மஞ்சள் காமாலை ஆனது முழுமையாக வெளியேறும்.
வாத நோயின் மூலம் பாதிக்கப்படுபவர்கள் இந்த சோம்பு கீரையை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொண்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். அந்த நோய் எதிர்ப்பு சக்தியின் மூலமாக இந்த வாத நோயானது எளிதில் குணமடையும்.
சோம்பு கீரையில் உள்ள மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது இதனை நாம் அடிக்கடி எடுத்துக் கொண்டு வந்தால் இதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும் அது மட்டும் இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும் இதன் மூலம் நமக்கு நோயில்லாத வாழ்வை பெறலாம்.