சீமை அகத்தி இதன் மலர்களை நாம் பார்த்திருப்போம்.அலங்கார செடியாக பலர் வீட்டில் வளர்க்கின்றன .ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். இதன் பூக்கள் மட்டும் அழகு அல்ல, இதிலுள்ள வேர்,இலை, மர பட்டை போன்ற ஒவ்வொன்றிலும் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. அதை பற்றி நாம் விரிவாக பார்க்கலாம்.
விஷத்தன்மையை முறிக்கும் சீமை அகத்தி:

விஷ பூச்சிகளின் எச்சம், மற்றும் விஷ பூச்சிகள் கடித்துவிட்டால், நமது உடம்பில் அரிப்பு மற்றும் சொறி சிரங்கு,புண்கள் போன்ற பல தோல் சம்பந்தமான நோய் வரும். அவ்வாறு வரும் போது இந்த சீமை அகத்தியை பயன்படுத்தினால் அதனுடைய விஷத்தன்மையானது குறையும்.
சீமை அகத்தியை வெயிலில் நன்றாக உலர வைத்து, பின்பு அதனை அரைத்து,அதனுடன் மஞ்சள் சேர்த்து, விஷ பூச்சிகள் கடித்த அல்லது எச்சம் பட்ட இடங்களில் வைக்கும் பொழுது, அந்த இடத்தில் உள்ள விஷத்தன்மையை முறித்து, வீக்கங்களை குறைந்து பழைய நிலைக்கு திரும்ப வர உதவும்.
அதிகமான தண்ணீரை எடுத்துக் கொள்ளாததால் சிறுநீரக பாதிப்பான சிறுநீரக அடைப்பு ஏற்படும். சிறுநீரக அடைப்பு ஏற்படுவதால் சிறுநீரகம் கழிக்க முடியாமல் பலர் வேதனையில் இருப்பார் அவ்வாறு இருக்கும் போது சீமை அகத்தியின் மஞ்சள் பூக்களை உலர்த்தி, நீரிலிட்டு நன்றாக சுண்ட காட்சி அதை தினமும் எடுத்துக்கொண்டு வந்தால்,சிறுநீரக அடைப்பானது விரைவில் குணமடையும்.

சீமை அகத்தியை மூலம் சரும பிரச்சனைகள் அனைத்திற்கும் நல்ல தீர்வு தரும். மற்றும் சொறி சிரங்கு, தேமல் போன்ற சர்ம வியாதிகளையும், எளிதில் குணமடைய செய்யும்.
ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் இதனை அடிக்கடி எடுத்துக் கொண்டால், ரத்த அழுத்தம் விரைவில் குறையும். இரத்த சோகை உள்ளவர்கள் சீமை அகத்திய எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு ரத்த சோகையானது இருக்காது.
படர்தாமரை குணப்படுத்தும் சீமை அகத்தி:
படர்தாமரை உள்ளவர்கள் பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் பசுமையான சீமை அகத்தியை எடுத்து நன்றாக வெயிலில் காய வைத்து, பின்பு அதனை மை போல அரைத்து அதனுடன், தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் சேர்த்து தடவும் பொழுது, அதில் உள்ள பாக்டீரியாக்கள் ஆனது, எளிதில் இறந்துவிடும் மற்றும் தோல் பழைய நிலைக்கு திரும்பி வர உதவும்.
முகப்பு பொலிவிற்கு பயன்படும் சீமை அகத்தி:
முகத்தில் உள்ள மங்கு மற்றும் வரட சருமம் போன்ற முகம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் சீமை அகத்தி ஒரு நல்ல தீர்வாக இருக்கும். சீமை அகர்த்தியை காய வைத்து அரைத்து, இரவில் அதனை மஞ்சளுடன் சேர்த்து முகத்தில் ஒரு இருபது நிமிடம் வைத்து பிறகு, அதை கழுவி விடலாம்.
பிறகு தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவிக் கொண்டு ஒரு இரவு முழுவதும் அப்படியே விட்டு விட .இதனை தொடர்ந்து செய்து கொண்டு வரும் முகம் பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்கும் .
சீமை அகத்தி
சீமை அகத்தி வெளிநாடுகளில் உரம் போட்டு அதனை அழகுக்கவும், அதனுடைய மருத்துவ பயனுக்காகவும் பலர் வளர்கின்றன. ஆனால் நம் இந்தியாவில் சீமை அகத்தியானது சாலையோரங்களில் குளம் மற்றும் ஆறு போன்ற நீர் நிலையங்களில் தாமாகவே வளரும் தன்மையே கொண்ட சரியாகும்.
சீமைக்காதியின் 13 அல்லது 14 அடி உயரம் வரை வளரும். இது நன்றாக அடர்த்தியாக வளரும் தன்மை கொண்டது.சீமை அகத்தியன் பூக்களை பார்ப்பதற்கு மிக அழகாகவும் இருக்கும். மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்தப் பூக்கள் நீளமாகவும் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி மிக அழகான ஒரு தெய்வத்தை காட்டும்