பண்ணை கீரையில் உள்ள பூ மற்றும் இலைகள் அனைத்திலும் மருத்துவ குணம் அதிகமாக உள்ளது. இது வெப்பமண்டல காடுகளில் தானாகவே செழித்து வரும். இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் மிகவும் அழகான காட்சியை தரும். இதன் நன்மைகள் ஏராளம். உடல் சூட்டை தணிப்பது, சிறுநீரகக் கோளாறு சரி செய்வது, ரத்தப்போக்கு கட்டுக்குள் வைப்பது, தோல் நோய்களை குணப்படுத்துவது, மாதவிடாய் வலியை போக்குவது ,புண்களை அகற்றுவது கண்களை மேம்படுத்துவது, ரத்தக்கசிவை குறைப்பது போன்ற பல நற்குணங்களை கொண்டது இந்த பண்ணை கீரை.
பண்ணை கீரையில் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள்:
கண்பார்வையை மேம்படுத்த உதவும் பண்ணை கீரை:
கண் பார்வை குறைவதற்கு காரணம் வைட்டமின் ஏ சத்து குறைவாக இருப்பது. வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைகளை சரி செய்யலாம்.
கண்ணில் புறை விழுதல் மற்றும் தெளிவற்ற பார்வை போன்ற பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பது, தூசு சூழ்நிலையில் கண்களை இருப்பது மற்றும் வைட்டமின் குறைபாடு ஆகும். இந்த குறைபாட்டை சரி செய்வதற்கு பண்ணைக்கீரை வாரம் இரு முறை எடுத்துக் கொள்வது நல்லது.
புண்களை அகற்ற உதவும் பண்ணை கீரை:
உடம்பில் ஏற்படும் புண்கள் ,அது பூச்சிக்கடியாக இருக்கலாம், மற்றும் காயங்களால் ஏற்படும் புண்களாக இருக்கலாம், சிலருக்கு புண்கள் ஏற்பட்டால் அது எளிதில் குணமடையாது.காரணம் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இரத்தம் சரியான அளவு இல்லாத காரணத்தினால் அந்த புண்கள் எளிதில் குணமடையாமல் இருக்கும். இவ்வாறு இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு இந்த பண்ணை கீரையை உணவில் அடிக்கடி எடுத்துக் கொண்டு வரும்பொழுது இந்த புண்களை விரைவில் குணமடைய செய்லாம்.

மாதவிடாய் வலியை போக்குவதற்கு உதவும் பண்ணை கீரை:
வைட்டமின் டி மற்றும் இரும்பு சத்து அதிகமாக இருப்பதினால் தேவையற்ற வழிகளை உடம்பில் ஏற்படுவதை குறைக்கும். மாதவிடாய் வலி ஏற்படுவதற்கு காரணம் ,உடலில் அதிகப்படியான நச்சு இருப்பது மற்றும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தான் இருக்கும். இந்த கீரையில் நீர் சக்தி அதிகமாக இருப்பதாலும் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதாலும் இந்த தேவையற்ற வலிகளை குறைக்க மிகவும் உதவுகிறது. மாதம் ஒருமுறை கீரையை எடுத்துக் கொள்வதன் மூலம் இப் பிரச்சனைகளை குணமடையும் .
தோல் நோயை குணப்படுத்த உதவும் பண்ணை கீரை :
தோல் நோய் ஏற்படுவதற்கு காரணம் போதுமான தண்ணீர் உடம்பில் இல்லாததால், தோல் வறட்சி அடைந்து தோள்களில் எரிச்சல் ஏற்படும். தூக்கமின்மை காரணமாக தோல் பிரச்சினை உருவாகும், ரசாயன பொருட்களை தொடர்ந்து அதிகமாக பயன்படுத்துவதாலும் தோல் பிரச்சினை ,உருவாக்கும் சூரிய வெப்பத்திலிருந்து தோலை பாதுகாக்க வேண்டும்.
அலர்ஜி ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கு உடனடியாக ஒரு தீர்வை கொடுக்க வேண்டும். பூஞ்சை தொற்று ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உணவு பழக்க வழக்கங்களில் சத்தான உணவுகளையும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பண்ணை கீரையில் ஒமேகா பி 3 அதிகமாக இருப்பதால் தோல் சார்ந்த பிரச்சனைக்கு சிறந்த நிவாரணமாக இருக்கும்.
உடல் எடை அதிகரிக்க உதவும் பண்ணைக்கீரை:
உடல் எடை குறைவாக உள்ளவர்கள் பண்ணை கீரையை அவர்களது உணவில் அடிக்கடி எடுத்துக் கொண்டு வரும் பொழுது, அவர்களுக்கு தேவைப்படும் கொழுப்புச்சத்து, நார்ச்சத்து , கால்சியம், இரும்புச்சத்து ,போன்றவை அதிகமாக கிடைக்கும்.
இதன் மூலமாக அவர்களது உடல் வலிமை பெறும் மற்றும் உடல் எடை அதிகரிக்க உதவும். நோய் தொற்றுகளிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.
சிறுநீரகப் பிரச்சனைக்கு பண்ணை கீரையின் மூலம் தீர்வு:
சிறுநீரகப்பையில் தேவையற்ற உணவு திடமாக இருப்பதால், சிறுநீரகம் கழிக்கும் போது வலி மற்றும் அசௌகரியம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை குறைப்பதற்கு நமது உணவில் சீரகம், பூண்டு, மிளகு, மற்றும் பண்ணை கீரையை அதனுடன் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் போது சிறுநீரகப் பிரச்சனையானது நிரந்தர தீர்வுக்கு வரும்.

குடல் நோயை குணப்படுத்தும் பண்ணை கீரை:
குடல் நோய் ஏற்பட்டால் வயிற்று வலி ,மற்றும் வயிற்றுப்போக்கு ,எடை குறைவு மலம் கழிக்கும் போது ரத்தம் உருவாகுதல், வாந்தி மற்றும் காய்ச்சல் ,வயிறு வீக்கமாகத் அடைதல் , வாயு பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் போன்றவை உருவாகும்.
இந்த குடல் நோயை சரி செய்வதற்கு உணவில் தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லாதது மிகப்பெரிய காரணமாகும்.நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்தல் நல்லது. பண்ணை கீரையில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், குடல் சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பண்ணை கீரையை எடுத்துக் கொள்வதன் மூலம் குடல் சார்ந்த பிரச்சினைகளை தவிர்க்கலாம்.