முக்கிரட்டை கீரை ஒரு கலைச்செடி போல தரிசு நிலங்களிலும்,சாலை ஓரங்களிலும், காட்சி அளிக்கும்.எந்த இந்தக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா..என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. நம் முன்னோர்கள் இந்தக் கீரையை சாப்பிட்டு தான் நீண்ட நாட்கள் அவர்களின் உடல் ரீதியான எவ்வித பிரச்சனைகள் இல்லாமல் வாழ்ந்தார்கள்.
முக்கிரட்டை என்பது ஒரு கொடி வகை கீரையாகும். இதன் அடர் நிற பூக்கள், மற்றும் வெண்மை நிற பூக்கள் இது அனைத்து சூழ்நிலைகளிலும் காணப்படும்.இது ஒரு கொடி வகையாகும்.இது உலகில் பல இடங்களான ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா, ஐரோப்பா,இந்தோனேசியா, ஜப்பான்,இலங்கை போன்ற பல்வேறு நாடுகளில் இந்த மூக்கிரட்டை கீரையின்,பலன்கள் அறிந்து அதனை அதிகமாக எடுத்துக்கொள்பவர் பலர் உள்ளனர்.
மூக்கிரட்டை கீரை ஒரு அமிர்தம் போன்ற கீரையாகும். இதன் வேர், தண்டு, பூ, என அனைத்தும் மூலிகை சார்ந்த பல நன்மைகலையும்,மருத்துவ குணமும் கொண்டது.
சிறுநீரகம் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற,இந்த முக்கிரட்டை கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.கொழுப்புகளை நீக்குவதற்கு இந்த கீரை மிகவும் உதவுகிறது. இதன் பயன் இதயத்தில் உள்ள சீரற்ற இரத்த ஓட்டத்தை சரி செய்யவும், மற்றும் நுரையீரல், சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும். இந்த முக்கிரட்டை கீரையானது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:
கல்லீரலில் உள்ள தேவையற்ற நீர்களை அகற்றுதல், மற்றும் கல்லீரலில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க, இந்த முக்கிரட்டை கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.சிறுநீரகத்தின் பிரச்சினைகள் பலர் அடிக்கடி சந்திக்கிறார்கள். அவ்வாறு உள்ளவர்கள்,இந்தக் கீரையை வாரம் இரண்டு,அல்லது மூன்று முறை எடுத்துக் கொள்ளுங்கள் கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது.
முக்கிரட்டை கீரை ஆனது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும். மலக்கட்டு உள்ளவர்கள் இந்த முக்கிரட்டை கீரையை ,ஒரு நெல்லிக்காய் பிடியளவு சாப்பிட்டு வரும்போது, மலக்கட்டானது விரைவில் நீங்கி அதிலிருந்து விடுபடுவார்கள்.
மூக்கிரட்டை கீரையின் அதிகமான குளிர்ச்சி தரும் ஒரு கீரை வகையாகும். இதனை அதிக உடல் சூடு உள்ளவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் நல்லது.
முக்கிரட்டை கீரையை அடிக்கடி எடுத்துக்கொண்டு வரும் பொழுது, கண்களின் பிரச்சினையாக இருக்கும் மாலை கண்,மற்றும் கண்களில் புரை விழுதல், தெளிவற்ற பார்வை, என கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் இருந்து விடுபடலாம்.ஏனெனில் இதில் வைட்டமின் ஈ,மற்றும் வைட்டமின் சி,போன்றது கண்ணுக்கு தேவைப்படும் சத்துக்கள் மிகவும் அதிகமாக உள்ளது.

முக்கிரட்டை கீரையை எவ்வாறு பயன்படுத்தலாம்
- முக்கிரட்டை கொடியில் உள்ள ஒவ்வொரு வேரும்,தண்டும்,பூவும், அத்தனை சத்துக்களை கொண்டுள்ளது.இதனை சமைத்து சாப்பிடுவதினால் மனிதர்களுக்கு எல்லாவிதத்திலும் ஊட்டச்சத்துக்களும், எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
- முக்கிரட்டை பொடியை தேனில் கலந்து சாப்பிடுவதாலும் உடலுக்கு சக்தி கொடுக்கிறது.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த முக்கிரட்டை கீரையை உணவிற்கு முன் எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது.
- முக்கிரட்டைமூளைக்கு மிகவும் அதிகமான ஆற்றலை செலுத்தும், இதனால் உடல் முழுவதும் சுறுசுறுப்பான நிலையில் இருக்கும்,அது மட்டுமல்லாமல் ,மஞ்ச காமாலை குணப்படுத்துவதற்கு பெரிதும் உதவுகிறது.

- மூட்டு வலி பிரச்சனை ,கணுக்கால் வலி, போன்ற அனைத்து விதமான கால் பிரச்சனைகளுக்கும், நிரந்தமான நிவாரணம் கொடுக்கிறது.
- செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இந்த முக்கிரட்டை கீரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
- முகப்பொலிவிற்கும்,முகத்தில் உள்ள சரும நோய்களுக்கும்,இந்த முக்கிரட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- கீரையில் உள்ள சத்துக்கள் ரத்தசோகை, என்ற நோயை குணப்படுத்தும் தன்மையைக் கொண்டது.
- குறைவான இரத்தத்தை உள்ளவர்கள்,இரத்தத்தை அதிகப்படுத்த இந்த கீரையை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.இந்த கீரையுமே அடிக்கடி எடுத்துக்கொண்டு வரும் பொழுது,அவர்களின் ரத்த அளவானது அதிகப்படுத்தும்.
- வாத நோயிலிருந்து முக்கிரட்டை கீரை மிகப்பெரிய விடுதலையை தருவதற்கு, பெரிதும் உதவுகிறது.
- காலை மற்றும் மாலையில்,இந்த முக்கிரட்டை கீரையை அரைத்து,வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், மூலநோய் உள்ளவர்களுக்கு விரைவில் குணமடைய வாய்ப்பு உள்ளது.
- மூக்கிரட்டை கீரையில் சுண்ணாம்பு சத்து, நார்ச்சத்து,தாதுக்கள், மற்றும் வைட்டமின் ஈ, வைட்டமின் பி, வைட்டமின் சி,என பலவித சத்துக்கள் உள்ளன.
- இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகமாக உள்ளதால்,ஆக்ஸிஜன் குறைபாடு உள்ளவர்கள் இந்த மூக்கிரட்டை கீரையை அதிகமாக எடுத்துக் கொண்டால், உடலில் ஆக்ஸிஜன் தேவையான அளவு அவர்களுக்கு கிடைக்கும்.
- முக்கிரட்டு வேர்களை காய வைத்து பொடி செய்து,குடித்தால் அதில் உள்ள சத்துக்களின் மூலம்,ஏற்படும் கண் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் குணமடையும்.