Homeமருத்துவம்கரிசலாங்கண்ணி இலையின் பயன்கள் | Karisalankanni illaiyin benefits in tamil

கரிசலாங்கண்ணி இலையின் பயன்கள் | Karisalankanni illaiyin benefits in tamil

கரிசலாங்கண்ணி இலையின் பயன்கள் என்றாலே முடி வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் ஒரு மூலிகை என்று நாம் அனைவருக்கும்அறிவோம்,ஆனால் கரிசலாங்கண்ணியில் ஏராளமான நன்மைகள் உண்டு.அவை கல்லீரல் பிரச்சனை, முதல் தலைமுடி வளர்ச்சி தூண்டும். இதில் இரும்புச்சத்து ,கால்சியம், வைட்டமின் சி,வைட்டமின் டி, பாஸ்பரஸ் போன்ற அதிகப்படியான சத்துக்கள் இருப்பதால், இது உடம்பில் ரத்த சிவப்பு அணுக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது, மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கிறது.

கரிசலாங்கண்ணி இலையின் பயன்கள் ஒன்று முடி வளர்தலை ஊக்குவிப்பது மற்றும் தலைமுடி உதிர்தலை தவிர்ப்பதற்கு,மிகப்பெரிய உதவியாக இருக்கும் .

கரிசலாங்கண்ணியை இலையை வெயிலில் நன்றாக காய வைத்து பின்னர், பொடி செய்து அதனை தலையில் ஹேர் பேக்காக போட்டுக் கொண்டால், தலையில் உள்ள பேன் பொடுகு அரிப்பு போன்ற அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

2 5

கரிசலாங்கண்ணி இலைகளை தேங்காய் எண்ணெயில் கலந்து வைத்து அதனை இரண்டு, மூன்று நாட்களுக்கு பிறகு எடுத்து, தினமும் அதை தலையில் தேய்த்துக் கொண்டு வரும்பொழுது தலைமுடியானது வலுப்பெறும்.

கரிசலாங்கண்ணி இலையின் எண்ணெய், மற்றும் கரிசலாங்கண்ணி ஹேர் பாக்,இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தேய்த்துக் கொண்டு வந்தால் தலையில் ரத்த ஓட்டங்கள் மிகவும் சிறப்பாக செயல்படும், அதன் மூலமாக முடி வளர்ச்சியும் அதிகரிக்கும் மற்றும் இளநரையை தடுக்கும். 

கரிசலாங்கண்ணி இலையின் பொடியை கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி எடுத்துக் கொண்டு வந்தால் கல்லீரலின் நச்சுக்களை வெளியேற்ற ,மிகவும் உதவியாக இருக்கும். பித்த  நீரை உருவாக்கும் செல்களில் இருந்து  கல்லீரலை பாதுகாக்கும் மஞ்சள் காமாலை உள்ளவர்கள்  கரிசலாங்கண்ணியை இலையை அவர்களின் பத்திய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால் மஞ்சகாமாலை ஆனது முழுமையாக குணமடையும்

3 4

பச்சை நிறம் கொண்ட காய்கறி மற்றும் கீரைகளில் ஆக்சிஜனேற்றம் மிகவும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் கரிசலாங்கண்ணி இலையில் ஆக்சிஜனேற்றமானது அதிகமாக இருக்கும். அவ்வாறு இருக்கும் உணவை நாம் அதிகமாக எடுத்துக் கொண்டு வந்தால் வைட்டமின்கள், தாதுக்கள்,கால்சியம், போன்ற ஊட்டச்சத்துகள் இதில் அதிகமாக இருப்பதால்  எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் .இதனால் உடலில் தொற்று நோய்களையும் காயம் மற்றும் புண்கள் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு எளிதில் குணமடையும்

கரிசலாங்கண்ணி பலவிதமான அலர்ஜி பிரச்சனைகளை குணப்படுத்துவதற்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கவும், மூட்டு வலி, நீரிழிவு நோய், மற்றும்  இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்துவதற்கு, கரிசலாங்கண்ணி மிகப்பெரிய பங்கினை வகிக்கிறது.

கரிசலாங்கண்ணி பொடியை  உட்கொள்வதாலும்,மேல் பூச்சாக  பயன்படுத்துவதாலும்,மூட்டு வலி, தசைப்பிடிப்பு பிரச்சனைகளை குணப்படுத்தும். தோல் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்தும், மற்றும் பூச்சி கடி , விஷ பூச்சிகளின் எச்சம் போன்றவற்றின் போன்றவற்றினால் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்க உதவும்.

கரிசலாங்கண்ணி இலையை பளபளப்பிற்கு, தயிர் உடன் கலந்து முகத்தில் பூசுவதாலும் மற்றும் கரிசலாங்கண்ணியை தேங்காய் எண்ணெயுடன் சேர்ந்து பூசுவதாலும்,இதில் உள்ள வைட்டமின் சி உதவியினால் சரும பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கொடுக்கும், மற்றும் முகப்பரு முகப்பருவினால் ஏற்பட்ட வடுக்கள் போன்ற பிரச்சனைக்கும் தீர்வாக இருக்கும்.

ர்ப்பிணி பெண்கள் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனையினால் மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்கள்,இவர்கள் அனைவரும் அவரவர் மருத்துவரை அனுப்பிய பின்னர் கரிசலாங்கண்ணியை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.. முதலில் கரிசலாங்கண்ணியை சிறிதளவு உணவில் சேர்த்து, அவரது உடல் அதற்குப் பின் எவ்வாறு செயல்படுகிறது என்ற தெரிந்து கொண்டு அதனை தொடர்ச்சியாக பயன்படுத்துவோம்.

 சுவாச பிரச்சனை மற்றும் ரத்தசோகை உள்ளவர்கள் கரிசலாங்கண்ணியை அதிகமாக எடுத்துக் கொள்வதால், அதில் உள்ள கால்சியம்,வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி12 சத்துக்களின் மூலம் இந்தப் பிரச்சனைகள் தீர்வு தீரும். கண் எரிச்சல் உள்ளவர்கள் உணவில்  கரிசலாங்கண்ணியை எடுத்துக் கொள்வதன் மூலமாக, கண்களின் தெளிவு மற்றும் கண் சார்ந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரு முடிவினை கொடுக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments