தற்பொழுது உள்ள காலகட்டத்தில், அனைவரும் பணம் சம்பாதித்தல் அதை சேகரித்தல் மற்றும் எதிர்கால வாழ்க்கை கனவு ஒரு வரக்கூடிய பிரச்சனையே என்று பல விஷயங்களை மனதில் போட்டு தங்களை தாங்களே கஷ்டத்தில் ஆழ்த்திக் கொள்கிறார்கள். பகல் முழுவதும் அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்த்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்து காலையில் நடந்த அனைத்து பிரச்சனைகளையும் நினைத்து அடுத்த நாள் என்ன பிரச்சினை வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டு அன்றைய நாளின் தூக்கத்தை இழக்கிறார்கள்.
கவலைகள் இன்றி வாழும் சில மனிதர்களும் உள்ளன. சிலர் இரவு முழுவதும் செல்போன்கள் பயன்படுத்தி கொண்டு இருப்பதால் தூக்கத்தை இழக்கிறார்கள். மேலும் சிலர் இரவு வேலை என்று இரவு தூக்கத்தை தொலைக்கிறார்கள். தூக்கம் என்பது ஒரு வரம். இரவு நேரம் தூங்கும் தூக்கம் தான் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையாக அமையும். இரவு முழுவதும் வேலை செய்துவிட்டு காலை தூங்குவது அல்லது மதியம் மாலை என நேரம் மாறி மாறி தூங்குவது உடல் நலத்திற்கு மட்டுமே மனதிற்கும் கேடு தரும். இவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.
அதுமட்டுமின்றி சிலர் நன்றாக உறங்க வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் அவர்களால் நிம்மதியாக உறங்க முடியாது. ஏனென்றால் பெரும்பாலான மனிதர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை வர இரு காரணம் முறையற்ற உணவு பழக்கவழக்கங்கள் ஆகும். இது போன்ற தூக்கமின்மை பிரச்சனைக்கு மருத்துவமனைகளில் விற்கும் மருந்துகளை அனுப்புவது என்பது போதைக்கு வேண்டுமானால் தூக்கத்தை தரும் ஆனால் இதுவே எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை விளைவிக்கலாம். எனவே சில இயற்கை முறையான, அக்காலத்தில் நமது பாட்டில் கூறிய வைத்தியங்களை தற்போது உள்ள நடைமுறையில் ட்ரை பண்ணி பார்க்கலாம். இதோ சில பாட்டி வைத்தியங்கள் தூக்கமின்மை பிரச்சனையை போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் எது உங்களுக்கு எளிதானதாக இருக்கிறது என்று தோன்றுகிறதோ அவற்றை தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பாட்டி வைத்தியம் 1 : சுரைக்காயை நன்றாக அரைத்து அதன் சாரை பிழிந்து எடுத்து ஒரு கப்பில் அல்லது டம்ளரில் ஊற்றிக் கொள்ளவும். இந்த சுரைக்காய் ஜூஸ் எவ்வளவு அளவு உள்ளதோ அதே சாமான அளவிற்கு நல்லெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒரு சேர கலந்து இரவு நேரத்தில் படுப்பதற்கு முன் உச்சந்தலையை நன்றாக ஊற்றி தேய்த்து வரவும். இதுபோன்று இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் அல்லது வாரம் மூன்று முறை செய்து வந்தால் தூக்கமின்மை இருக்காது.
பாட்டி வைத்தியம் 2 : சிறிய வெங்காயத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும்.வேகவைத்த தண்ணீரை வடிகட்டி இரவு சாப்பிடும் சாதத்தில் கலந்து சாப்பிட வேண்டும். அதாவது இரவு தண்ணீர் ஊற்றி வெள்ளை சாதம் சாப்பிடுபவர்கள் அந்த சாதத்தில் இந்த தண்ணீரையும் சேர்த்து சாதம் சாப்பிட வேண்டும் இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் இன்மை சரியாகிடும்.
பாட்டி வைத்தியம் 3 : ஆறு அன்னாசி பூக்களை இரண்டு டம்ளர் தண்ணீரில் நன்றாக ஊற வைக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரம் ஆவது நன்றாக ஊற வைக்க வேண்டும். நன்றாக உரிய அன்னாசி பூவை ஊறவைத்த அதே தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நீங்கள் கொதிக்க வைத்த தண்ணீர் அறை மடங்காக மாறும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அதாவது இரண்டு டம்ளர் தண்ணீர் ஆனது ஒரு டம்ளர் வரும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். குறித்த தண்ணீர் வெதுவெதுப்பாக ஆரியவுடன் குடிக்க வேண்டும். இதனை இரவில் குடித்தால் நல்லது. இரவு சாப்பிடுவதற்கு முன்போ அல்லது சாப்பிட்ட பிறகோ அதனை குடிக்கலாம். ஆனால் தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு இதை கொடுத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தூக்கம் வரும்.
பாட்டி வைத்தியம் 4 : ஒன்று அல்லது இரண்டு ஜாதிக்காய் நன்றாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். அரைத்த இந்த பேச்சை இரவு தூங்குவதற்கு முன்பு நாக்கில் வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். ஜாதிக்காய் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதை மறந்து விடாதீர்கள். எனவே இந்த ஜாதிக்காய் சாப்பிடும் வைத்தியத்தை மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே செய்தால் போதுமானது.