Chapathi kalli fruit benefits in tamil
சப்பாத்திக்கள்ளி பழத்தின் ஏராளமான நன்மைகள் உள்ளது இது கடும் வெயில் உள்ள பகுதிகளில் அதிகமாக வளரக்கூடிய ஒரு செடியாகும் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் நீர்க்கட்டி கருசுதைவு மற்றும் கண் பார்வையே மேம்படுத்துதல் சிறுநீரகத்தை சுத்தப்படுத்துதல் ஞாபக மறதி போக்குதல் போன்ற பல நன்மைகளை நமக்கு கொடுக்கிறது.
சப்பாத்திக்கள்ளி பழத்தின் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள்:
கரு சிதைவை தடுப்பதற்கு பயன்படும் சப்பாத்திக்கள்ளி பழம் :
கரு சிதைவிற்கு காரணம் குரோமோசோமின் அளவு குறைவாக இருப்பது, ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வாக இருப்பது, கருப்பை அல்லது கர்ப்பப்பை வாய் பிரச்சனை இருப்பது, தொற்று நோய் பிரச்சனைகளால் கரு சேதைவு ஏற்படும் மற்றும் வாழ்க்கை முறை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாலும் கரு சிதைவு ஏற்படும்.
இந்த கரு சிதைவுகளை தவிர்ப்பதற்கு நாம் உடம்பில் ஊட்டச்சத்துக்கள் சரியான அளவு இருந்தால் போதும். ப்போலிக் ஆசிட் மாத்திரையை கர்ப்ப காலத்தில் முதல் நாளிலிருந்து எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.உணவு முறையில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவை எடுத்துக் கொள்வது நல்லது .அந்த வகையில் சப்பாத்திக்கள்ளி பழத்தின் கரு சிதைவு ஏற்படாமல் இருப்பதற்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளது.
கர்ப்பப்பை உள்ள நீர் கட்டிகளை கரைக்க உதவும் சப்பாத்திக்கள்ளி பழம்:
ஒரு சிறு திரவத்தால் ஆன கர்ப்பப்பையில் மேல் பரப்பில் காணப்படுவது கர்ப்பப்பை நீர்க்கட்டி ஆகும். இந்த நீர்க்கட்டி ஏற்பட்டால் சில சமயங்களில் இடுப்பு வலி ,ஒழுங்கற்ற முறையில் சிறுநீரகம் கழிப்பது, மற்றும் வயிறு வீக்கம் அடைதல் போன்ற அசோகரின் நமக்கு உணர்த்தும் சில சமயங்களில் எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் இந்த நீர்க்கட்டி ஆனது உருவாகும்.
இவ்வித பிரச்சனைகளை தடுப்பதற்கு உடலில் ஊட்டச்சத்துக்கள் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. மாதவிடாய் சுழற்சியானது சரியான முறையில் நடைபெற்றால் இந்த பிரச்சினை வராது. முறையற்ற மாதவிடாய் சுழற்சியின் காரணமாக இந்த நீர்கட்டிகள் உருவாகும் இதனால் பிசிஓடி பிசிஓஎஸ் என்ற பிரச்சனைகள் உருவாகும், இதனால் உடல் எடை கூடுதல் போன்ற பிரச்சனைகளும் உருவாகும்.
எவ்வித பிரச்சனைகளில் இருந்து விடுபட சப்பாத்திக்கள்ளி பழத்தை அடிக்கடி எடுத்துக் கொண்டு வரும் பொழுது,கர்ப்பப்பையானது சுத்தப்படுத்தி தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும். இதன் மூலம் நீர்கட்டி போன்ற பிரச்சனைகளை நமக்கு வரவிடாமல் தடுக்கும். அது மட்டுமல்லாமல் கரு எந்த ஒரு தடையில் இல்லாமல் ஆரோக்கியமாக உருவாகும்
சர்க்கரை நோயாளிக்கு பயன்படும் சப்பாத்திக்கள்ளி பழம்:
இன்சுலின் என்ற ஹார்மோன் ரத்தத்திலிருந்து சர்க்கரையை அளவை குறைக்க பயன்படுகிறது.சர்க்கரை நோய் இருந்தால் அடிக்கடி சிறுநீரகம் கழித்தல் அதிக தாகம் ஏற்படுதல் ,எடையில இழப்பு, உடல் சோர்வு, மங்கலமான பார்வையை பெறுதல் ,காயம் ஆற தாமதிப்பது போன்ற பிரச்சனைகள் நமக்கு உருவாகும் .
சர்க்கரை நோய் வருவதற்கு காரணம் உடல் பருமன் அதிகமாக இருப்பது,மற்றும் அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால்,ஊட்டச்சத்து இல்லாத உணவை எடுத்துக் கொள்வது , மற்றும் மரபியல் மூலம் சர்க்கரை நோய் உருவாகிறது.
சர்க்கரை நோய் ஏற்பட்டால் இதய நோய்,சிறுநீரக பாதிப்பு ,கண்கள் பாதிப்பு ,நரம்பு மண்டலம் பாதிப்பு, கை, கால் மற்றும் பாதங்களில் புண் ஏற்படுதல் நோய்த்தொற்று அதிகமாகல் போன்ற பிரச்சனைகள் வரும்.இத்தகைய பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு சப்பாத்தி கள்ளி பழத்தை மாதம் மூன்று முறை எடுத்துக் கொள்வதால் இப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

ஞாபக மறதியை போக்கும் சப்பாத்திக்கள்ளி பழம் :
கார்பன் மோனாக்சைடு நச்சு நினைவாற்றலை குறைக்கிறது .இந்த கார்பன் மோனாக்சைடு குறைப்பதற்கு நம் உடலில் இருந்து அதனை வெளியேற்றுவதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலமாக நினைப்பாற்றலை அதிகமாக பெறலாம்.

கண் பார்வையை மேம்படுத்தும் சப்பாத்திக்கள்ளி பழம் :
வைட்டமின் ஏ குறைபாடு உள்ளவர்களுக்கு கண் பார்வை மற்றும் கண்களில் புறைவு விழுதல் கண் சார்ந்த அனைத்து பிரச்சனைக்கும் எளிதில் வரக்கூடும். சப்பாத்தி கள்ளிப்பழத்தில் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதனால் கண் பார்வையை மேம்படுத்தி, கண் பார்வையில் நல்ல தெளிவை ஏற்படுத்தும். அதனால் இப்ப பழத்தை அடிக்கடி எடுத்துக் கொண்டு வரும்போது கண் பார்வையானது மேம்பட்டு வரும்.

சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி பழம் :
சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம் உடலில் நீர்பாற்றாகுறை.உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீரகம் மூலம் வெளியேற்றுவதால் உடலுக்கு நன்மையை தரும். சிறுநீரகம் ஏற்படும் போது வலி மற்றும் அடிக்கடி சிறுநீரகம் கழிப்பது போன்றவை சிறுநீரக தொற்றுக்கு அறிகுறியாகும். இவ்வாறு ஏற்படும் பொழுது சப்பாத்திக்கள்ளி பழத்தை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்வதால் சிறுநீரக பாதிப்பை குறைக்கலாம்.