Homeமருத்துவம்முகப்பருக்கள் நீங்க இயற்கை வழிமுறைகள்! ட்ரை பண்ணி பாருங்க!

முகப்பருக்கள் நீங்க இயற்கை வழிமுறைகள்! ட்ரை பண்ணி பாருங்க!

நம் முகத்தில்முகப்பருக்கள் வர முக்கிய காரணமாக அமைவது நம் அன்றாட உணவு  பழக்கவழக்கங்கள். நாம் பயன்படுத்தும் பேசியல்  கிரீம்களால் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே மாற்றத்தை காண முடியும். ஆனால் இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தியும் நம் அன்றாட உணவு பழக்க வழக்கங்களை சற்று மாற்றி அமைப்பதால் நீண்ட நாட்கள் முகத்தில் முகப்பருக்கள் வராமல் நம் சருமங்கள் பளபளப்பாக காட்சியளிக்கும். முகத்தில் பருக்கள் வர பல காரணங்கள் இருந்தாலும் அதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது உடலின் பித்த சூடு அதிகரிப்பது.

உடலின் பித்த சூடு அதிகரிக்க காரணமாக அமைவது நம் அன்றாட உணவு பழக்க வழக்கங்கள் ஆகும். குறிப்பாக இன்றைய நவீன காலத்தில் இளைஞர்கள் நொறுக்குத் தீனிகளையும் அதிக அளவு எண்ணெய் பலகாரங்களையும், ஃபாஸ்ட் ஃபுட் போன்ற வகைகள் எளிதில் நம் சருமத்தை மட்டுமல்லாமல் நம் உடலையும் பாதிப்படைய செய்கின்றன. இவை உண்பதால் நம் சருமத்திற்கும்  கெடுதல் மற்றும் நம் உடல் உறுப்புகளுக்கும் கெடுதல் என்று  நன்கு அறிவோம்…. ஆனால் என்ன செய்வது? நொறுக்குத் தீனிகளையும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளையும் தவிர்க்க முடியவில்லை!

குறிப்பு 1 : பழங்கள் – நான் அன்றாட உணவில் படங்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால் முகப்பருக்கள்  மட்டுமின்றி கை கால்கள் முதுகு  பகுதி போன்றவற்றில் வரும் பற்கள் மற்றும் கட்டிகள் குறையும். மிகவும் புளிப்புத் தன்மை கொண்ட பழங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

 குறிப்பு 2 : இரண்டு டீஸ்பூன் தேனுடன் ஒரு டீஸ்பூன் பட்டை தூள் அதாவது cinnamon powder கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து முகத்தில் உள்ள பருக்கள் இருக்கும் இடத்தில் தினமும் இரவு படுப்பதற்கு முன்பு  முகத்தில் தடவி  கொண்டு படுத்து விட்டு, மறுநாள் காலை எழுந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். முகத்தை அழுத்தி துடைக்காமல் ஒரு காட்டன் துண்டைக் கொண்டு ஒத்தி  எடுக்கவும்.

honey and cinnamon

 குறிப்பு 3 : இரண்டிலிருந்து நான்கு டீஸ்பூன் நல்லெண்ணையில், ஐந்து அல்லது ஆறு மிளகுகளை தட்டி போட்டு ஊற வைத்து அந்த எண்ணெயை தினமும் இரவு தேய்த்துவர முகப்பருக்கள் படிப்படியாக குறையும். 

குறிப்பு 4 : எள் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை தட்டி போட்டு குழைத்து அந்த பேஸ்ட்டை முகத்தில் உள்ளபருக்கள் மறைந்த இடத்தில் போட்டு வந்தால்,  பருக்கள் இருந்த தழும்புகள் எளிதில் மறையும்.

 குறிப்பு 5 : தேங்காய் எண்ணெயில் சிறிதளவு கரிசலாங்கண்ணி சாதனை பொழிந்து கொதிக்க வைத்து, ஆரிய பிறகு அந்த எண்ணையை உச்சந்தலையில் தேய்த்து குளிப்பதனால் முகப்பருக்கள் குறையும். 

குறிப்பு 6 : சந்தன பவுடரை ரோஸ் வாட்டரில்  கலந்து, அந்த பேஸ்டை பருக்கள் மேல் தடவி வர, பருக்களால் வரும் வழியும் குறையும், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

குறிப்பு 7 : ஊறவைத்த பாதாம் உடன் சிறிது பசும்பால் சேர்த்து நன்றாக அரைத்து அவற்றை முகத்தில் உள்ள பருக்கள் மேல் இரவு முழுவதும் தேய்த்து வைத்தால், முகம் பளிச்சென்று இருக்கும் முகத்தில் உள்ள பருக்களும் குறையும்.

sandalpowder
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments